பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

அட்டநாகபந்தக் கவியைக் கூறிப் பிறகு அதனை எழுதி வைத்திருந்த ஏட்டையும் மருதபூபரிடம் தந்தார்; அந்தப் பாட்டின் பொருளையும் கூறினார்.

சித்திர கவிகளின் பெருமை சித்திரத்திலே அதனை அடைத்துப் பார்த்தால்தான் தெரியும். ஆகவே பாட்டைக் காதினுல் கேட்டபின்னர், அது சித்திரத்தில் அமைந்திருப்பதைக் கண்ணுல் பார்க்க எண்ணிப் புலவர் கொடுத்த ஏட்டைப் பிரித்துப் பார்த்தார் மருத பாண்டியர்.

அந்த ஏட்டில் சர்க்கரைப் புலவர் கூறிய அட்ட நாகபந்தச் செய்யுள் இருந்தது. அது மட்டுமா? அந்தப் பாட்டை வரைந்த இடத்துக்கு அருகே உள்ள குறுகிய இடத்தில் சிறியதாக வேறு ஒர் அட்டநாக பந்தமும், அதில் செய்யுள் ஒன்றும் இருந்தன. அந்தச் செய்யுளையும் பாண்டியர் படித்தார்.

பின்பு புலவரை நோக்கி, "தாங்கள் முதலில் எழுதிய அட்டநாகங்கள் போதர்வென்று, அவற்றைக் குட்டி போடச் செய்து சிறிய நாகங்கள் எட்டை வேறு அமைத்திருக்கிறீர்களே!' என்று கூறினார்.

புலவருக்கு முதலில் அவர் கூறியது விளங்கவில்லை. "பெரிய அட்டநாகபந்தமும் அதன் அருகே குட்டி அட்ட நாகபந்தமும் இருக்கின்றனவே! நீங்கள் ஒரு பாடலைத் தானே சொன்னீர்கள்?' என்று மறுபடியும் மருத பாண்டியர் கேட்டார்.

அப்போது புலவருக்கு ஒரு வகையாகச் செய்தி தெரிந்தது. "இன்னும் ஒரு பாடல் இருக்கிறதா?” என்று வியப்போடு கேட்டார்.

"என்ன, அப்படிக் கேட்கிறீர்கள்? அது உங்களுக்குத் தெரியாதா?" என்றார் மருத பாண்டியர்.

புலவருக்கு உண்மை விளங்கிவிட்டது. 'குழந்தையைக் கேட்க வேண்டும்!" என்று கூறினார்.