10
னர். 'பரம்பரைக்கு ஏற்ற வீரம்' என்ற நினைவு. அவர்கள் உள்ளத்தில் தோன்றியது.
"நான் பகைவரை வெல்லாமற் போவேனானால் ஓங்கிய சிறப்பும் உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனுர் முதலிய புகழ்பெற்ற புலவர் என் நாட்டைப் பாடாமல் ஒதுக்கும் நிலை வருவதாகுக! என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க முடியாத வறுமை என்னை வந்து அடையட்டும்! இந்த வஞ்சினத்தைப் பாண்டிய அரசர் வழி வந்தவன் என்ற உணர்ச்சியோடு நான் சொல்லுகிறேன்.”
அரசன் வஞ்சினம் கூறும்போது சிங்கம் முழங்கு வதுபோல இருந்தது. உடன் இருந்தோர் அஞ்சி நடுங்கினர். அரசன் தோள் துடித்தது; கண்கள் சிவந்தன; வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக வந்தது. "இனி இந்த உலகமே எதிர் நின்ருலும் போரை நிறுத்த முடியாது” என்று அமைச்சர் உணர்ந்து கொண்டனர்.
போருக்கு வேண்டியவற்றையெல்லாம் அவர்கள் செய்யலானார்கள்.
போர் மூண்டுவிட்டது. அரசனே நேரில் சென்று போரிடத் தொடங்கினன். "இத்தனை சிறு பிள்ளை போர்க்களத்துக்குப் போயிருக்கிருனே!" என்று அச்சமும் வியப்பும் கொண்டனர் மக்கள்.
"நேற்று வரையில் கிண்கிணி கட்டியிருந்த இளங்கால் அது; இன்று போர் வந்ததென்று அதில் வீரக் - -