பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கழலைக் கட்டிக்கொண்டான். முதல் முறையாகக் குடுமி களைந்த விழா சில நாட்களுக்கு முன்தான் நடந்தது. அந்தத் தலையில் குலத்துக்குரிய அடையாளமாகிய வேம் பையும் போர்ப் பூவாகிய உழிஞையையும் அணிந்து கொண்டான். சிறு வளைகளை அணிந்திருந்த கை இப் போது வில்லைப் பற்றிக்கொண்டது. சிங்கக்குட்டி தாவுவதுபோலத் தேரில் ஏறி நிற்கிருனே! இப்படியும் வீரத் திருக்குழந்தை உலகத்தில் உண்டா? அவன் மாலை வாழட்டும்! அவன் பெருமை வாழட்டும்!” என்று புலவர்கள் வாழ்த்தினர்கள்.

போரில் பகைவராக வந்தவர் ஒருவர் இருவர் அல்லர். சேரனும் சோழனும் அவர்களுடன் ஐந்து சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டனர். தலையாலங் கர்னம் என்ற இடத்தில் போர் மிகக் கடுமையாக நடந்தது. இரண்டு பக்கத்திலும் படைப் பலம் மிகுதி யாகவே இருந்தது.

இடைக்குன்றுார் கிழார் என்ற புலவர் இதைக் கேள்வியுற்ருர். தலையாலங்கானத்துக்கும் சென்று பார்த்து வந்தார். பாண்டிய மன்னனுடைய வீரத்தை எண்ணி அவர் பிரமித்துப் போனர். "இந்த உலகத்தில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப்பற்றிக் கேட்டிருக்கிருேம். ஒரு மன்னனை மற்றொரு மன்னன் எதிர்த்துப் போர் செய்தலும் அதில் ஒருவன் தோல்வியுறுதலும் உலக இயற்கை. ஆளுல் இதுபோல நாம் கேட்டதே இல்லை. நெடுஞ்செழியனுடைய பெருமையையும் பலத்தையும் அறியாத ஏழு பேர் கூடிக்கொண்டு அவனை எதிர்க்கிறார்கள். அவனே சலியாமல், முரசு முழங்க மேற்சென்று அடுகின்றன். இதைக் கதையிலும் கேட்டதில்லையே!” என்று வியந்து பாடினர்.