பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டியார் அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்று மகிழ்ந்தார். இவ்வாறு அவரை அழைத்து விருந்து வழங்கிக் கொண்டாடியவர்களில் மருத்தர்ை என்பவர் ஒருவர். அவர் விருந்தினருக்கு உணவளித்து உபசரிப்பதில் வல்லவர். இல்லறத்தின் பயன் விருந்தினர்களுக்கு உணவு அருத்துவதே என்ற நோக்க முடையவர். பெரிய செல்வராக இராவிட்டாலும் தமக்கு இருந்த ஓரளவு பொருளைக் கொண்டு பசித்தவர்களுக்கு உணவு அளித்து அதல்ை வரும் உவகையைப் பெரிதென எண்ணி வாழ்ந்து வந்தார். - ஒளவையார் மருத்தனர் வீட்டுக்குப் போனர். அந்த உபகாரி கடவுளையே நேரில் கண்டவர் போல உடம்பு பூரிக்க உவகைக் கண்ணிர் பெருக அப்பிராட்டியாரை வரவேற்ருர். அவருடன் வந்த அன்பர்களும் அங்கே விருந்துண்டார்கள்.

உணவுகொண்ட பிறகு சிறிது நேரம் ஒளவையார் அங்கே தங்கியிருந்தார். மருத்தனர் தம் வீட்டுப் புழைக்கடையில் வாழைத்தோட்டம் போட்டிருந்தார். ஒளவையார் அங்கே சென்று பார்த்தார். வாழை மரங்கள் பல, இலைகளே இல்லாமல் இருந்தன. பலவற்றில் தாறுகளை வெட்டியிருந்தனர்.

உடன் இருந்த அன்பர்கள் சிலர் மருத்தணுருடைய அன்னதானத்தைப் பாராட்டினர். "இந்த வாழைத்தோட்டந்தான் இவருக்குக் கற்பகக் காடாக உதவுகிறது. எந்தச் சமயத்தில் யார் வந்தாலும் இலையோடு பூவோ காயோ இதிலிருந்து பறித்து, வந்தவரை உபசரிக்கிருர். அதனுல்தான் பல மரங்கள் மொட்டையாக இருக் கின்றன" என்று ஒருவர் சொன்னர். வாழைத் தோட் டத்தின் காட்சி அவர் கூறியதை மெய்ப்பித்தது. - சிறிது நேரம் மருத்தனுர் வீட்டில் இருந்துவிட்டு ஒளவையார் விடைபெற்றுப் புறப்பட்டார். மருத்-