உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 Churchili) என்ற வார்த்தையில் முதல் எழுத்து 'C' ஆக இருப்பதால் விடை கூறியவருக்கு, 2 டாலர்களும் 2 பாக் கெட் 'காமல்' சிகரட்டும் பரிசாகக் கொடுக்கப்பட்டன. "இப்போது இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருப்பவர் யார்?' என்ற கேள்வி இரண்டாவதாகக் கேட்கப்பட்டது. "ஆட்லி" என்று ஒரு பார்வையாளர் சடாரென்று பதில் கூறி னார். 'Camel' என்ற பெயரின் இரண்டாம் எழுத்தாகிய 'A' யுடன் 'Attlee' என்பது தொடங்குவதால், இவ்விடை தந்த வருக்கு 4 டாலரும் 4 பாக்கெட் 'காமல்' சிகரட்டும் பரிசாகத் தரப்பட்டன. மூன்றாவது கேள்வி "இன்றைய உலகில் வெளிநாட்டு மந்திரிகளில் முக்கியமானவர் யார்? என்பது; "மாலத்தோவ்" என்ற பெயரின் முதல் எழுத்து Camel' என்ற சொல்லின் மூன்றாவது எழுத்தாக இருப்ப தால், விடை கூறியவருக்கு மூன்றாவது பரிசாக 8டாலரும் 8 பாக்கெட் 'காமல்' சிகரட்டும் வழங்கப்பட்டன. நான்காவது கேள்வி “இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய சிறந்த இராணுவ வீரர் யார்?" என்பது. 'Camel' என்பதில் நான்காவது எழுத்து 'E' ஆக இருப்பதால் இக்கேள்விக்குப் பதில் E-ல் தொடங்க வேண்டும். 'Eisenhover' 'ஐசன்ஹோ வர்' என்று பதில் சொல்லியவருக்கு நான்காம் பரிசாக 16 டாலரும் 16 பாக்கெட் சிகரட்டும் அளிக்கப்பட்டன. கடைசிக் கேள்வி "உலகின் முக்கியமான நகரம் ஒன்றின் பெயரைச் சொல்லுக" என்பது. 'லண்டன்' என்ற சொல்லின் முதல் எழுத்து 'L', அது 'Camel' என்பதின் கடைசி எழுத் தாக இருப்பதால் இந்த நகரத்தின் பெயரைச் சொன்ன வருக்கு ஐந்தாம் பரிசாக 32 டாலரும் 32 பாக்கெட் சிகரட் டும் கிடைத்தன. இதைப் போன்ற பல நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன. பத்திரிகைகளில் விளம்பரங்கள் வானொலியில் விளம்பாங்கள் நிகழ்வதால் பத்திரிகை களில் விளம்பரங்கள் ஒன்றும் குறைந்துவிட வில்லை. ஒவ்வோர் அமெரிக்கப் பத்திரிகையிலும் பாதிக்குமேல்