உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கட்டணம் யிலும் தொலைக்காட்சியிலுங்கூட விளம்பரங்கள் வெளியிடம் படுகின்றன. பத்திரிகை அதன் ஒரு பகுதியை விளம்பரம் வெளியிடுபவருக்கு விற்பதைப்போல, வானொலி நிலையத் தார் தாம் ஒலிபரப்பும் நேரத்தின் ஒரு பகுதியைக் குறிப் பிட்ட விலைக்கு விளம்பரம் வெளியிடுபவருக்கு விற்கின்றனர். பத்திரிகை அதன் தலைப்புச் செய்திகள் உள்ள பக்கத்தில் அல்லது அட்டையின் வெளிப்பக்கத்தில் பிரசுரிக்கும் விளம் பரங்களுக்கு அதிகமான வாங்குவதுபோல, வானொலி நிலையத்தார் வானொலியை மக்கள் மிகுதியாகக் கேட்கும் நேரங்களுக்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் உள்ள நேரங்களுக்கும் கூடுதலான விளம்பரக் கட்டணங்கள் வாங்குகின்றனர். வாங்குகின்றனர். குறிப்பிட்ட குறிப்பிட்ட நேரத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளும் வணிகர் அந்த நேரத்தில் தம் செலவில் ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இடையிடையே தம் பொருளை விளம்பரப் படுத்துவர்; தம் பொருளைப் பற்றி வானொலியில் நாடகம் நடத்துபவர்களும் உளர்; தம் நிகழ்ச்சிகளைக் கேட்கும்படி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துபவர்களும் உண்டு. ' NBC' என்ற நேஷனல் பிராட்காஸ்டிங் கம்பெனியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நான் பார்வையாளராகச் சென்றேன். அப்போது ஒட்டக மார்க் சிகரெட் (Camel cigarette) கம் பெனியாரின் விளம்பரம் தொடங்க இருந்தது. அங் நிகழ்ச்சிக்கு 250 பார்வையாளர் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளரின் பகுத்தறிவைச் சோதிக்கும் ஐந்து கேள்வி களைக் கேட்கப் போவதாகவும், தம் சிகரெட்டின் பெயரான (Camel) என்ற ஆங்கில வார்த்தையின் ஐந்து எழுத்துக் களையும் முதல் எழுத்தாகக் கொண்ட வார்த்தைகளை (Camel) என்ற வார்த்தையில் அவ்வெழுத்துக்கள் உள்ள வரிசை முறைப்படி ஐந்து கேள்விகளுக்கும் விடையாகக் அவர் அறிவிப்பாளர் கூறினார். கூறவேண்டுமென்றும் கேட்ட முதல் கேள்வி "போர்காலத்தில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாயிருந்த ஒருவர் பெயர் என்ன?' என்பது. பார்வையாளர் ஒருவர் "சர்சில்" என்று பதிலளித்தார்