உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஓர் ஆஸ்திரேலிய நண்பர் ஒரு தடவை எனக்கு எழுதியீ ருந்தார். இந்தப் போக்கர் விளையாட்டில், அமெரிக்கர் கையாளும் ஒரு சூழ்ச்சி தமக்குப் போட்டியில்லாமல் அவர் கள் செய்து விடுவதுதான். உதாரணமாக, அமெரிக்க மாட்டு வியாபாரிகள், தம்மிடமுள்ள மாட்டு இறைச்சியின் விலையை உயர்த்துவதற்காக, அருகிலுள்ள மெக்சிகோ நாட்டில் கொன்று புதைக்கப்படும் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பரிசாகக் கொடுக்கிறார்க. ளாம். அர்ஜென்டினாவின் மாட்டு இறைச்சிப் போட்டியைத் தடுப்பதற்காகச் சுகாதாரச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி அந்நாட்டு மாடுகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்வதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அதன் அமெரிக்க சட்டசபையிலுள்ள மாட்டு இறைச்சி வியாபாரிகள் சில சமயம் அரசியல் தகராறுகளையும் கிளப்பிவிடுகின்றார் கள். 8. விளம்பரம் காரணமாக அமெரிக்காவில் விளம்பரக்கலை அடைந்துள்ள முன் னேற்றம் மிகப் பெரிது; எனவே, இந்த நூற்றாண்டை 'விளம்பர சகாப்தம்' என்று வருணிப்பவர்களும் இருக்கின் றனர். விளம்பரம் மக்களுடைய சமூக, பொருளாதார வாழ்க்கையை மாற்றும் ஆற்றலுடையதாக விளங்கு. கின்றது. தொழில் முன்னேற்றத்திற்கும் வாணிப வளர்ச்சிக் கும் உதவி செய்யும் தகுதியையும் விளம்பரத் தொழில் அடைந்திருக்கிறது. அரசினரின் ஆதரவை எதிர்பாராமல், சுதந்திரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பத்திரிகைகள் வெளிவருவது விளம்பர வருமானம் மிகுதியாக இருந்தால் தான் இயலும்; விளம்பரங்களின் வெற்றியே வியாபாரத்- தின் பெருக்கம் என்பது அமெரிக்கரின் முடிவு. வானொலியில் விளம்பரம் அமெரிக்காவில், பத்திரிகைகளிலும் பல சாலைகளின் சந்திப்புகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமன்றி வானொலின்