உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தாதார்களுக்கு வழங்குதல் 104 சந்தாதார்களுக்கு அவரவர் வீடுகளில் பத்திரிகையைக் கொடுக்கும் வேலையை மாணவர்கள் மட்டுமே செய்கின்ற னர். இவ்வாறு வருவாய் பெறும் மாணவர் 5 லட்சம் பேர் அமெரிக்காவில் உளர். பெஞ்சமின் ஃப்ராங்கலின், ஹென்றி போர்டு, தாமஸ் ஆல்வா எடிசன், தளபதி ஐசன் ஹோவர், ஹெர்பர்ட் ஹுவர் ஆகிய பெரியோர்களெல்லாம். சிறுவர்களாக இருந்தபோது பத்திரிகை விற்றவர்களுள் சிலர் ஆவர். 12 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வேலையில் ஈடுபட அநுமதிக்கப்படுவதில்லை. (பிற்பகலில் வெளி யாகும்) பத்திரிகைகளை இரவில் கொண்டுபோய்க் கொடுக்க. 16வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிக்கூடத்தில் பாடங்களைச் சரியாய்ப் படிக்காத. மாணவரும் இவ்வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. புதிய சந்தாதார்களை மிகுதியாகச் சேர்த்துத் தரும் சிறுவர்களுக்குப் பத்திரிகை உரிமையாளர் பரிசுகள் கொடுக்கின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், ஒரு நாளில், சந்தாதார்கள் இச்சிறுவர்களுக்கு. அன்பளிப்புக் கொடுத்து வாழ்த்துகின்றனர். படிக்கும் வழக்கம் பல் அமெரிக்காவில் 10 கோடி மக்கள் நாள் இதழ்களைப் படிக்கிறார்கள். வாரப் பத்திரிகைகள் படிப்பவர்கள் இன்னொரு இரண்டரைக் கோடியினர். மக்களில் எல் லோரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாயிருப்பதே. இதற்குக் காரணமாகும். காலைச் சிற்றுண்டியை கொள்ளும்போது, அவர்கள் கட்டாயமாகக் காலையில் வெளிவந்த செய்தித்தாளைப் படித்துவிடுகின்றனர். இதனால் உணவு உட்கொள்ளுவதற்கு நெடுநேரம் ஆகிறது. “ செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்!" உட்