உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ 105 என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்; ஆனால் இவர்கள் படிப் பதையும் உணவு உட்கொள்ளுவதையும் ஒரே காலத்தில் முடிக்கின்றனர்! வாங்கும் வழக்கம் சைனாவில் ஷாங்ஹாய் நகரத்தில் பத்திரிகைகளை விற் பதைவிட அவற்றை வாடகைக்கு விடுவதே அதிகமாம். பத்திரிகை கொண்டுவரும் பையன் ஒருநாளைக்குப் பன்னி ரண்டு பேர்களுக்கு ஒரே பத்திரிகையை வாடகைக்குக் கொடுத்து வாங்குவானாம்; ஆனால் அமெரிக்காவில், பத்திரிகை படிக்கும் ஒவ்வொருவரும் தமக்கெனத் தனித் தனியாகப் பத்திரிகை வாங்கிவிடுகின்றனர். நாள்தோறும் ஐந்து அல்லது ஆறு வகைப் பத்திரிகைகள் வாங்குவோரும் அமெரிக்காவில் இருக்கின்றனர். ரயில் நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் பத்திரிகை விற்கும் கடைகள் நள்ளிரவு வரை திறந்திருக்கின்றன. மருந்துக் கடைகளிலும் பத்திரிகை கள் விற்கப்படுகின்றன. நண்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் அன்பளிப்பாகப் பலர் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்து கின்றனர். இவற்றிலிருந்து பத்திரிகை படிப்பதில் அமெரிக்கருக்குள்ள ஆர்வத்தை நாம் அறியலாம். இதழ்களின் வளர்ச்சி அமெரிக்காவில் 2300 நாள் இதழ்கள் உள்ளன. இவற்றுள் நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டைம்ஸ், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளைப் பத்து லட்சத்துக்கு மேற் பட்டவர்கள் வாங்குகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், பத்திரிகை விற் பனையை அதிகரிப்பதற்காக, ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை யாளர் தம் பத்திரிகை வாங்குபவர்களுக்குச் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல்களை அன்பளிப்பாகக் கொடுத் தனராம். மற்றொரு பத்திரிகையாளர் தம் பத்திரிகை படிப்பவர்களுக்காக மாதிரி வீடுகள் (Model Houses) உள்ள