106 பொருட்காட்சி நடத்தினராம். நியூயார்க் ஹெரால்ட் ட்ரீபியூன் பத்திரிகையாளர் பிரயாணத் திட்டங்கள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவ்வாறெல் செய்ததால் பத்திரிகை வாங்குபவரின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருக்கிறது. எக்காரணத் தாலாவது எ திர்பாராமல் பத்திரிகை வாங்குவோர் தொகை குறைந்து, அதனால் பத்திரிகையின் செல்வநிலை கெட்டுவிடாதபடி அதற்குப் பாதுகாப்பாகப் பத்திரிகை யாளர் இன்சூரன்ஸ் செய்துகொள்ளுகின்றனர். பல்வேறு குறிப்புக்கள் நியூஸ் 'NEWS' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமாக 'N' (North) 'வடக்கு, 'E' (East) கிழக்கு 'W' (West) மேற்கு, 'S' (South) தெற்கு ஆகிய நான்கு திக்குகளிலும் அரசியல் துறையில் மட்டுமன்றி, வேறு துறைகளில் நிகழ்வனவற்றையும் அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவாகவும் சிறப்பாகவும் வெளியிடுகின்றன. பங்கு மார்க்கட், பொருளாதாரநிலை, உடல்நலத்தைப் பேணுதல், சத்துணவு (Nutritive Food), புதிய உணவு வகைகள், தோட்ட அமைப்பு, வீட்டை அழகுபடுத்துதல், திருமண ஆலோசனைகள்,சிறு கதைகள், புத்தக மதிப்புரைகள், இயல் இசை நாடகம், நாய் பூனைகளை வளர்த்தல், புகைப்படக் கலை, பொழுது போக்குக்கான குறிப்புக்கள், நீதிமன்றத்துச் செய்திகள், விஞ்ஞானத்தில் புதிய ஆராய்ச்சிகள், விகடத் துணுக்குகள், குறும்புப் படங்கள், புள்ளி விவரங்கள், திரைப்படச் செய்திகள், வானொலி தொலைக் காட்சி (Television) ஆகியவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் முதலிய எண்ணிறைந்த பகுதிகளும் அமெரிக்கப் பத்திரிகைகளில் இருப்பதால், அமெரிக்கரின் வாழ்வைப் பத்திரிகைகள் தாம் உருவாக்குகின்றன. 66 எந்த உணவைத் தயாரிக்கலாம்? எவ்வித ஆடை தரிக்கலாம்? வீட்டை எவ்வாறு அழகு படுத்தலாம்? எந்த நூல்களைப் படிக்கலாம்? எந்தத் திரைபடத்துக்குச்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/107
Appearance