116 வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி இப் போது தனித்தனி டைஜஸ்ட்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. பெண்கள் டைஜஸ்ட், விஞ்ஞான டைஜஸ்ட் உழவர் டைஜஸ்ட், எழுத்தாளர் டைஜஸ்ட், நீக்ரோ டைஜஸ்ட் என்பவை இவற்றுள் சில. பத்திரிகை நிருபர்கள் அமெரிக்கப் பத்திரிகைகள் இவ்வளவு வளர்ச்சி யடைந்திருப்பதற்குக் கொலம்பியா, மிசௌரி போன்ற பல்கலைக் கழகங்கள் கற்பிக்கும் பத்திரிகைக் கல்வியே முக்கிய காரணம். தபால் வழியாகப் பத்திரிகைக் கல்வி புகட்டும் பல நூறு நிலையங்களும் அமெரிக்காவில் உள்ளன. தவிர, நல்ல முறையில் செய்தி அனுப்பும் நிருபர்களுக்கு நியூயார்க்கிலுள்ள லாங் ஐலண்ட் பல்கலைக் கழகத்தார் பரிசுகள் வழங்குகின்றனர். அமெரிக்கப் பத்திரிகைகளின் இன்றைய நிலைக்கு மற்றொரு காரணம் உலக மக்களின் எண்ணங்களை உரு வாக்கும் அறிஞர் பலர் அமெரிக்கராக இருப்பதேயாகும். ஜான்-கந்தர், லூயி-பிஷர், எட்கார்-ஸ்நோ, வால்ட்டர்- லிப்மன், வின்சன்ட்-சீயன், எட்மண்டு-டெய்லர், பெர்ல்-பக் போன்ற மேதைகள் பத்திரிகையுலகில் தலை சிறந்தவர்கள். இவர்கள், யாவரும் உலகின் பல நாடுகளுக்குச் சென் றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவைப் பற்றிய ஆதாரமான நூல்களை எழுதியிருப்பவரும் ஓர் அமெரிக்கரே; இவர் ஹார்ப்பர்ஸ் பத்திரிகைத் துணை ஆசியரான ஹார்ட்லி கிராட்டன் என்பவராவார். கடிதங்களைப்போலவே கட்டுரைகளை எழுதி, இடையிடையே செய்திகளையும், புள்ளி விவரங்களையும் இணைத்து விடுவதே இவர்களிற் பலர் - வாளினும் கூரிய தம் ஆயுதங்களால் கையாளும் முறை. அரசியல் விவகாரங்களைப் பற்றி ஆராயும்போது, தனிப்பட்டவர்களின் குணங்கள், தன்மைகள், சுவையான செய்திகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதையே தங்களுடைய
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/117
Appearance