உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 முதற் கடமையாக அமெரிக்க எழுத்தாளர் கருதுவர். இத்தகைய எழுத்தாளர்கள் வாழ்க்கையில் நிறைந்த அனுபவம் உடையவர்கள். ஒருவரே சட்டசபை உறுப்பின ராகவும், நாடகக்கலை விமர்சகராகவும், உலகப் பெரியார் பலரின் நண்பராகவும் இருப்பதை அமெரிக்க எழுத். தாளருள் காணலாம். , அமெரிக்க எழுத்தாளர் பலர் செம்மையான மனத் தோடு கட்டுரைகள் எழுதுவதில்லை. இந்து சமயத்தைப் பற்றியும் இந்திய நாட்டைப்பற்றியும் இழிவாக எழுதி எள்ளியுரைக்கும் 'பண்பாடு' அவர்களிற் பலரிடம் இன்னும் இருந்து வருகிறது. இதைக்குறித்துத் "தமிழ்நாடு" என்னுஞ் சீரிய தமிழ் நாள் இதழ் பின்வருமாறு எழுதி யிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கதாகும்:- சமுதாய இந்நிலையில், அமெரிக்க அரசினர் ஒன்று செய்தல் நலமாகும்; அமெரிக்க நாட்டு அரசியல், பொருளியல், சமயவியல், இயல்களை நேரில் கண்டறிந்த இந்திய அறிஞர்கள் ஒன்றல்ல. பல பல கட்டுரைகளில் அமெரிக்க வாழ்வின் சீர் கேடுகளை ஆயிரக்கணக்கான பக்கங்களில் அமெ ரிக்கரும் கண்டிராத இனிய சொல்நடையில் எழுதி வெளியிட முடியும்; அதனால் இடையே நிலவும் நட்புரிமை மாறும்; உலக நாடுகளிடையே அமெரிக்க நாட் டின் நிலைமை நினைக்கவும் அரிய இடர்ப்பாட்டில் கொண்டு நிறுத்தும் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு தன்னாட்டவருக்கு அறிவுரை வழங்கு தல் வேண்டும். "செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும். இரு நாடுகட்கும் குன்றும்; அன்பு