உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வானொலிக்கருவிகள் 118 வானொலி அமெரிக்காவில் மக்கள் தொகையைப்போல வானொலிக் கருவிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக இருக்கிறது. பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வானொலிக் கருவிகள் உண்டு. சமையலறைகளிலும் ஏனைய இடங்களிலும் அவைகளைக் காணலாம். வானொலிக் கருவி உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மோட்டார்க் கார்கள் அமெரிக்காவில் இயங்குகின்றன. மின்சார உதவியின்றிச் சாதாரண 'டார்ச்லைட் பாட்டரி' யின் உதவியால் வேலை செய்யும் மிகச் சிறிய வானொலிக் கருவிகளை மக்கள் தம்முடன் எடுத்துச் செல்வதும், பஸ் அல்லது இரயில் பிரயாணத்தின்போது அவைகளை உபயோகிப்பதும் அமெரிக்காவில் நாள்தோறும் நடக்கும் சாதாரணமான நிகழ்ச்சிகளாகும். இதைப் போன்ற வானொலிக் கருவிகள் அமெரிக்காவில் இரண்டு கோடி உள்ளனவாம்! அமெரிக்கக் குடும்பங்கள் சிலவற்றில் நூ தனமான வானொலிக் கருவிகளைக் கண்டேன். அவற்றில் இரண்டைப் பற்றி மட்டும் இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன். "அலாரம் ரேடியோ" இவற்றுள் ஒன்று, "அலாரம்-ரேடியோ' என்பது. இன்றிரவு 8 மணிக்கு நமது குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவி ரெட்டி அவர்கள் வானொலியில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நிகழ்ச்சியைக் கேட்க யான் விருப்பமுள்ளவனாயிருப்பேன்; ஆனால் உரிய காலத்தில் யான் வானொலிக் கருவியை இயக்க மறந்துவிடக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக, அலார கடிகாரமுள்ள வானொலிக் கருவிகள் அமெரிக்காவில் உள்ளன. அந்தக் கடிகாரத்தில்