உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 3 மணிக்கு மணி அடிக்கும்படி வைத்துவிட்டால், வானொலிக் கருவி 8 மணிக்குத் தானே இயங்கத் தொடங்கிவிடும்! விரும்பும் நிகழ்ச்சியைத் தவறாமல் கேட்பதற்கேற்பட்ட ஒரு விஞ்ஞானப் புதுமை இது. ஒலிப்பதிவு செய்யும் ரேடியோ மற்றொன்று, நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்யும் கருவி யும் அதற்கான இசைத் தட்டுக்களும் உள்ள வானொலிக் கருவி, குறித்த நேரத்தில் ஓரிடத்துக்கு வருவதோ அல்லது தம் வேலைகளை விட்டுவிட்டு வானொலிப் பேச்சைக் கேட்பதோ, தம் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று அமெரிக்கர் கருதுகின்றனர். ஆகையால், விஞ்ஞான ஆராய்ச்சியின் பயனாக இதற்கும் ஒரு மாற்றுக் கண்டு பிடித்துள்ளனர். இன்று பகல் 2 மணிக்குத் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இன்னிசை வானொலியில் நடை பெறுவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலும் ஒரு சிறுவன், அந் நிகழ்ச்சியைக் கேட்க விருப்பமிருந்தால், தன் தாயிடம் தெரிவித்து விட்டுச் செல்லலாம். அவள் உரிய நேரத்தில், இசை நிகழ்ச்சியை வானொலிக்கருவியால் ஒலிப்பதிவு செய்து விடுவாள். சிறுவன் தன் பள்ளிக்கூட நேரம் முடிந்தபின், தனக்கு ஓய்வு இருக்கும்போது, 'எம். எஸ்.' அன்று வானொலியிற் பாடிய பாடல்களைக் கேட்டு இன்புறலாம். சில வானொலிக் கருவிகளில் இசைத்தட்டில் வெளியான பாடல்களைக் கேட்க இயலுவதை யாவரும் அறிவோம். ஒரு முறைக்குமேல் ஒரு பாடலைக் கேட்கத் தங்களுக்குப் பொறுமையும் நேரமும் இல்லாததால் இசைத்தட்டை விலை கொடுத்து வாங்குவது அமெரிக்கரின் வழக்கம் அன்று எனவே, அமெரிக்க நூல் நிலையங்கள் புத்தகங்களுடன் பற்பல ஆயிரம் இசைத் தட்டுக்களையும் சேகரித்து வைத்து முன்பணம் பெற்றுக் கொண்டு, அவைகளையும் இரவல் கொடுக்கின்றன.