121 பொருள்களின் உற்பத்தியாளர்கள் செய்யும் விளம்பரச் செலவு மூலம் வானொலியைக் கேட்பதற்குப் பணம் செல விடுகின்றனர். வானொலி நிலையங்களெல்லாம் விளம்பரங் கள் மூலமாகத்தான் தம் வருவாயைப் பெறுகின்றன. வானொலி நிலையத்தார் தாம் வணிகருக்கு விளம்பர நேரத்தை விற்பதற்குத் தம் நிலையத்தின் சக்தி, ஒலிபரப்பு நிகழும் நேரம், நிகழ்ச்சியின் தன்மை, அந்நிகழ்ச்சியைக் கேட்கக் கூடியவர்களின் பாகுபாடு, நிகழ்ச்சியின் அளவு ஆகிய வற்றுக்குத் தக்கபடி விலை கூறுவர். பெரிய வானொலி நிலையங்களுக்கு அவற்றைப் பார்வை யிட வருபவர்கள் வாயிலாகவும் மிக்க வருமானம் கிடைக் கிறது. நியூயார்க் நகரில் சில நிலையத்தார் குறிப்பிட்ட நேரங்களில் பார்வையாளரை அழைத்துச் சென்று, பல பகுதிகளையும் காட்டி, விளக்கம் கூற ஏற்பாடுகள் செய்து, அதற்கென அலுவலரையும் நியமித்துள்ளனர். முக்கியமான செய்தி நிகழ்ந்தால் அதை அறிவிக்க ஓர் இயந்திரமும் தனி அறையும் உண்டு. அந்த இயந்திரம் வேலை செய்ததும், வேறு நிகழ்ச்சிகளை மறைத்துவிடும் சக்தி உடையது என்றும், மகாத்மா காந்தியடிகளும் தலைவர் ரூஸ்வெல்ட்டும் இறந்தபோதும், ட்ரூமன் மீண்டும் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், ஜப்பானியர் பெர்ல் ஹார்பரில் தாக்கியபோதும், போர் முடிவுற்றபோதும் இக் கருவி பயன்படுத்தப் பட்டதென்று பார்வையாளருக்கு விளக்கம் கூறும் அறிவிப்பாளர் தெரிவித்தார். பத்திரிகை களைப் போல, அமெரிக்க வானொலி நிலையங்களுக்கும் அமெரிக்கா முழுவதிலும் உலகின் பெரு நகரங்களிலும் பல நிருபர்கள் இருக்கின்றனர். ஏனைய அமெரிக்க ஸ்தாபனங் களைப்போல வானொலிக் குழுவினரும் ஆராய்ச்சியிலும் விஞ்ஞான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துகின்றனர்; லாபம் அடைவதோடு தம் கடமை முடிந்து விட்டதாக அவர் கள் எண்ணுவதில்லை. அமெரிக்க வானொலிகள் சுகாதார மான பழக்கங்களை மக்களிடையே பரப்பவும் பல முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/122
Appearance