122 தொலைக் காட்சி தொலைக் காட்சி நிலையங்களையும் சில வானொலிக் குழுக் கள் அமைத்திருக்கின்றன. 'மைக்ரோ- வேவ்ஸ்' (Micro- Waves) என்ற இடமறியும் 'வானொலி' போர்க்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு வினாடியில் 1,86,000 மைல் தொலைக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யலாம்! அமெரிக்காவில், இப்போது தொலைக் காட்சி நிலையங்கள் (Television transmitters) 98-ம், தொலைக் காட்சிக் கருவிகள் (Television sets) 23 லட்சமும் உள்ளன. தொலைக்காட்சிக் கருவியின் விலை 170 டாலர் (ரூபாய் 1300) முதல் 25000 டாலர் வரை உண்டு. 'அல்ட்ரா பாசிமிலி' (Ultra Fascimile) என்ற நூதனக் கருவி ஒன்றையும் அமெரிக்க வானொலிக் குழுக்கள் கண்டு பிடித்துள்ளன. இது தொலைக்காட்சி, மிக விரைவான போட்டோப்படம் ஆகிய இரண்டும் சேர்ந்தது. இதன் தொலைக்காட்சிப் பகுதியை அமெரிக்க ரேடியோ கார்ப்பரேஷனும், போட்டோப் பகுதியைக் கோடாக் கம்பெனியாரும் அமைத்துள்ளனர். இதை மேலும் ஆராய்ச்சி செய்தால்,தந்தியையும் ஆகாயவிமானத் தபாலையும் கர்னாடக மாக்கி விடலாம்! ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் ஒரே சமயத்தில் திரையில் தோன்றும்படி பேசும் படங்களை இக் கருவியின் வாயிலாகக் காட்ட இயலுமாம்! பல்வேறு நிகழ்ச்சிகள் அமெரிக்க வானொலிகளில் பலதிறப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னரே எழுதி வைத்ததை ஒலி பரப்பும் கருவியின்முன் படிக்கும் வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இதனால், அமெரிக்கர் தம் வேலையைச் செய் வதற்கு அடுத்தபடியாக, மிகுதியான நேரத்தை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதில் தான் செலவிடுகின்றனர். அமெரிக்க வானொலிகள் தாம் ஒலிபரப்பும் நேரத்தில் 41%
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/123
Appearance