உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 இசை நிகழ்ச்சிகளிலும் 16% நாடக நிகழ்ச்சிகளிலும், 13% செய்தி விமர்சனங்களிலும், 4% விளையாட்டுக்களிலும், எஞ்சிய நேரத்தை விகட நிகழ்ச்சிகளிலும் செலவிடுகின்றன. பத்திரிகைத் தலையங்கங்களின் சுருக்கம் அமெரிக்க வானொலி களில் நாள்தோறும் படிக்கப் படுகிறது. சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும்போது, வானொலியில் விளக்கமான அறிவிப்பு நிகழ்கிறது. காலை 5மணிக்கு மக்களை எழுப்ப, அமெரிக்க வானொலி நிலையங்கள் நீதிக் கதைகளை ஒலி பரப்பு கின்றன. உடற்பயிற்சி செய்வோருக்கு அப்பயிற்சி எண் களைக்கூட வானொலி அறிவிப்பாளர் எண்ணிவிடுகிறார்! இரவில், குழந்தைகளை உறங்கச் செய்வதற்கான தாலாட்டுப் பாடல்களும் அந்த வானொலியில் உண்டு. நகைச் சுவையான நிகழ்ச்சிகளை நடத்த வானொலி நிலை யகங்கள் நடிகர்களைச் சொந்தமாக அமர்த்திக் கொள்ளுகின் றன. வானொலிச் செயின் ஒன்றிலிருந்து தம் செயினுக்கு மாறச் சம்மதித்தால், ஒரு நகைச்சுவை நடிகருக்கு 4மிலியன் டாலர் தருவதாக ஒரு வானொலிச் செயின் அறிவித்ததாக, நான் அமெரிக்காவில் இருந்தபோது, பத்திரிகைச் செய்தி ஒன்று வெளிவந்தது. அமெரிக்க வானொலிகளில் டவுன் மீட்டிங் ஆப் தி ஏர் Town Meeting of the Air) என்ற ஒரு நிகழ்ச்சி நடை பெறுகிறது. 35 ஆண்டுகளாகச் செவ்வாய்க்கிழமைதோறும் இந்நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு பிரச்சினையைப் பற்றித் தக்கவர் நால்வர் பல்லாயிரம் மக்களுக்குமுன் உடன் பட்டும் மறுத்தும் உரையாடுகின்றனர். விவாதத்தின் இறுதியில், அரை மணி நேரத்திற்குப் பார்வையாளரின் வினாக்களுக்குப் பேச்சாளர்கள் விடையளிக்கின்றனர். கிராமக் குடி அரசு முறையைப் பின்பற்றி இந்நிகழ்ச்சி தோன்றியுள்ளது. இதன் பயனாக, மக்கள் தங்களைப் பாதிக்கும் விஷயங்களில் மிகுதியாக அக்கறை கொள்ளு கின்றனர். இப்போது, மற்ற நாட்டு வானொலிகளிலும் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.