124 அமெரிக்காவில், செய்திகளை விமர்சனம் செய்வது சிறப்பாக நடைபெறுகிறது. செய்திகளை ஊன்றிப் படிக்கா மல், இந்த விமர்சனங்களைக் கேட்டு உலக நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளுபவர்களும் மிகுதியாக இருக்கின்றனர். செய்திகளை விமர்சனம் செய்வது அமெரிக்காவில் பெரிய பதவி. இந்த விமர்சனங்களை நிகழ்த்துபவர்கள் பத்திரிகை. அனுபவமுள்ள ள பெரிய எழுத்தாளர்களே யாவர். இவர் களுக்குத் திரைப்பட நடிகருக்குள்ள செல்வாக்கு உண்டு. ராபர்ட் மண்ட்கோமரி என்பவர் 261 வானொலி நிலையங்கள் வாயிலாக ஒரே நேரத்தில் வாரந்தோறும் செய்தி விமர்சனம். செய்கிறார்! அமெரிக்கக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் வானொலிக் கல்விக்கென ஒரு பகுதியும் சில பயிற்சிகளும் உள்ளன. வானொலி நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது உரு வாக்குவது, நிலையத்தை நிருவகிப்பது, அடையாளங்கள் காட்டி, நடிகர் நடிகையர்களுக்குக் கட்டளைகள் தெரிவிக் கும் முறை (Sign Language) ஆகியவை இங்கே கற்பிக்கப் படுகின்றன. வானொலித் துறையில் அமெரிக்கா இவ்வளவு முன் னேற்றம் அடைந்திருப்பது அந்நாட்டு வானொலிக் கல்லூரி களினாலேயாகும் என்பது மேற்கூறியவற்றிலிருந்து புலனா கும். இந்தியாவின் வருங்காலம் எழுதப் படிக்கத் தெரிந்த வர் தொகை கூடுவதைப் பொறுத்ததாகும். கல்வி யின்மையைப் போக்க வானொலி இணையற்ற கருவியாக உள்ளது. ஆகையால், வானொலி நிலையங்களையும், அவற் றின் பயனையும் விரிவாக்க வேண்டியது நம் நாட்டுக்கு இன்றியமையாதது. இத்துறையில் அமெரிக்கரின் அனு பவத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் அஞ்சல்வழிக் கல்விக்காக வானொலி நிலையம் அமைக்கவும் மதுரைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/125
Appearance