உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 11 இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வானொலிப் பேட்டி 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஓஹையோ இராச்சியப் பல்கலைக் கழக வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அப் பல்கலைக் கழக வானொலிக் கல்வித்துறைத் தலைவர் டாக்டர் கீத் டைலர் அவ்வமயம் என்னைப் பேட்டி கண்டார். அந்நிகழ்ச்சியின் முழு விவரம் இங்கே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் வானொலிப் பேட்டிகள் நிகழும் முறையும், பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவரின் கருத்துக்களை மக்கள் நன்கு உணரும்படி விளக்கிக் கூறும் தன்மையும் இந்தியாவைப் பற்றி அமெரிக்க மக்கள் என்ன அறிய ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதும் இப்பேட்டியிலிருந்து தெரியவரும். இதிலிருந்து புலனாகும். டாக்டர் டைலரின் முன்னுரை இன்றைய உலகின் பெரிய நாடுகளில் இந்தியா ஒன்றா கும். பல கோடி மக்களுள்ள இந்நாடு பிரிட்டிஷ் ஆட்சியி லிருந்து சமீபத்தில் விடுதலை பெற்றுள்ளது. ஆசியாவில் மட்டுமன்றி, உலக முழுவதிலும் இந்தியாவுக்கு மகத்தான பங்கு எதிர் காலத்தில் உண்டு. இந்த நாட்டு வியாபாரி ஒருவர் - சென்னையிலிருந்து மிஸ்டர் சோமலெ இன்று நம் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அவருடைய நாட்டைப்பற்றி இப்போது அவரிடம் பேசுவோம். கேள்வி:- பழைய இந்தியாவானது புதிய இந்தியா, யாக்கிஸ்தான் என்று இரு கூறுகளாக பிரிக்கப்பட்டதே. இப்பிரிவினை மத அடிப்படையில் நிகழ்ந்தது. நான் சொல்லுவது சரியா? பதில்:- தங்கள் கருத்து சரியன்று; பாக்கிஸ்தான் மத அடிப்படையில் நிறுவப்பட்டது உண்மையே; ஆனால்