உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கேள்வி :- மார்ஷல் (பொருளாதார உதவித்) திட் டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:-மார்ஷல் திட்டத்தின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால், அது உலக முழுவதற்கும் பொருத்தமாக இருக்கவேண்டும். ஐரோப்பாவுக்கு மார்ஷல் திட்டம் இருப்பதுபோல் ஆசியாவுக்கும் ஒரு பொருளாதார உதவித் திட்டம் வேண்டும். கம்யூனிசத்தைத் தடுக்க அதுவே வழி. ஆசியாவில் இந்தியா கேந்திர நிலையிலுள்ளது. கேள்வி:- "கம்யூனிசத்தை ஒழிக்கவே மார்ஷல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கம்யூனிசம் ஐரோப்பாவில் மட்டும் ஒழிந்தால் போதாது; ஆசியாவினின்றும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆகவே ஆசியாவுக்கும் ஓர் உதவித் திட்டம் வேண்டும்; இத்திட்டத்தை அமுல் செய்ய இந்தியா தகுதியான இடம். இந்தியாதான் ஆசியாவின் தலைவிதியை உறுதிப்படுத்த வல்லது" என்று கூறுகிறீர்கள். உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன். உலக அமைதி ஏற்பட இதுவே வழி. உங்கள் விடைகளுக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள், மிஸ்டர் செட்டியார். பதில்:- உங்களுக்கு என் நன்றி உரியது, மிஸ்டர் டைலர். 12. தியேட்டர்கள் திரைப்பட உற்பத்தியில், உலகில் முன்னணியில் நிற்கும் நாடுகளோடு நாமும் இருக்கின்றோம் என்பதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்றைப் படித்தவுடன் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தேன். இத்துறையில் ஈடுபட்டுள்ளோ பெரு முயற்சியால் இந்தத் தொழிலில் உலகி லேயே இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது.