உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திரைப்பட மனப்பான்மை முதன்மையாக, என்னைக் கவர்ந்தது, திரைப்படம் மக்களின் வாழ்வைப் பலவகைகளில் வரையறை செய்யும் கருவியாக இருப்பதுதான். அமெரிக்கர், வாரம் ஒரு முறை யாவது தியேட்டருக்குச் செல்லாமல் உயிரோடிருப்பதே இயலாதென்ற உறுதியான கருத்துடையவர்கள். மற்றவர் கள் திரைப்படம் பார்ப்பதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டு கிறார்கள். உடல் நலமில்லாதவர்கள், உற்சாகமடைவதற் காகப் படம் பார்க்கச் செல்லுவதும் அமெரிக்கரின் வியப் பைத்தரும் வழக்கங்களில் ஒன்று! உலகில் படம் பார்ப் பவர்களில் மூன்றிலொரு பகுதியினர் அந்த நாட்டினரே. உலகில் எடுக்கப்படும் படங்களில் மூன்றில் இருபங்கு அமெரிக்காவிலேயே உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஒரு தியேட்டரும், அமெரிக்கா வில் 8,000 பேருக்கு ஒரு தியேட்டரும் தியேட்டரும் இருப்பதன் காரணத்தை மேற்கூறியவற்றிலிருந்து ஓரளவு அறியலாம். டிக்கட் வாங்குவது டிக்கட் வாங்குவதற்குத் தியேட்டருக்குத்தான் போக வேண்டுமென்பதில்லை. பெரிய நகரங்களில் முக்கிய பகுதி களில் உள்ள பல அலுவலகங்களிலும் ஹோட்டல்களிலும் பொருட்காட்சிச் சாலைகளிலும், எந்தத் தியேட்டருக்கும் எத்தனை டிக்கட்டுகள் வேண்டுமானாலும் வாங்கலாம். டிக்கட்டைத் தரும்போது, அந்தத் தியேட்டரின் வரை படம் ஒன்றும் தருவார்கள். தீப்பிடித்தால், நாம் எந்தப் பக்கமாகச் செல்லவேண்டும், வெளியே செல்லுவதற்கான வழிகள் எங்கெங்கே இருக்கின்றன என்ற விவரங்கள். இந்த வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கும். செய்திப்படம் செய்திப் படங்கள் நம் நாட்டைவிடப் பலமடங்கு மிகுதியாக அமெரிக்காவில் காட்டப்படுகின்றன. செய்தியை