உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வின்சாரம், துணியைக் காயவைப்பது மின்சாரம், காய்ந்த துணியை மடிப்பது மின்சாரம், சமையல் செய்வது மின்சாரம் தயிர் கடைவதும் ரொட்டி சுடுவதும் மின்சாரம், தலை முடியைக் காயவைக்க, கால் அமுக்க, உறங்கும்போது குளிர்காலத்தில் கம்பளியைச் சூடாக்க, வேனிற் காலத்தில் குளிரவைக்க - இவை ஒவ்வொன்றுக்கும் மின்சாரக் கருவி ஒன்று உண்டு. தையல் இயந்திரமும் இசைத்தட்டும் கடிகாரமும் மின்சாரத்தால் இயங்குகின்றன. கூட்டல் கழித்தல் ஆகிய கணக்குகளையும் மின்சாரத்தால் செய்ய லாம். இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கொடுப்பது மின்சார இயந்திரம். போக்குவரவை கட்டுப்படுத்துவதும் மின்சார இயந்திரம். வீடு கட்டவும், பாத்திரம் கழுவவும், அஞ்சல் ஸ்டாம்புகள் விற்கவும், நியூயார்க் பஸ்களிலும் தரைக்குக் கீழ் ஓடும் ரயில்களிலும் வேறு சில இடங்களிலும் டிக்கட் விற்கவும் மின்சாரம் பயன்படுகிறது. இப்போது அமெரிக்கர் மனிதனுடைய மூளைக்குப் பதிலாகவும் மின்சாரத்தைப் புகுத்திவிடப் பார்க்கிறார்கள். யஸ் போக்குவரவு நியூயார்க் நகர பஸ் போக்குவரவைப் பற்றியும் இங்கே சிறிது கூறலாம். நியூயார்க் நகர பஸ்களில் கண்டக்டர்கள் இல்லை. பயணச்சீட்டுகள் கொடுக்கும் வழக்கம் இல்லை. பஸ் ஓட்டுபவருக்கு அருகில், எடையைக் காட்டும் இயந்திரம் போன்ற ஒரு கருவி உண்டு. இக்கருவியில் கட்டணத்தை, உரிய சில்லறை நாணயமாகப் போட்டாலன்றி இது வழி விடாது. பஸ் மின்சார கதவுகள் அமைப்பால் பஸ் இயக்கும் இயந்திரங்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. ஓட்டுபவர் பஸ்ஸை நிறுத்தினால் இக்கதவுகள் திறந்து கொள்ளும்: அவர் பஸ்ஸை ஓட்டத் தொடங்கியவுடன் கதவுகள் தாமே மூடிக்கொள்ளும். நியூயார்க்கில் ஒரு பஸ்ஸில், ஒரேவிதக் கட்டணந்தான் உண்டு. பலவிதக் கட்டணங்கள் ஏற்படுத்துதல், பயணச்