14 நடை சீட்டுக் கொடுத்தல் இவற்றால் பஸ்கள் விரைவாகச் செல்வது தடைப்படும்; கண்டக்டர் வைத்துக்கொண்டால் முறைச் செலவு மிகுதியாகும்; இவற்றைத் தடுக்கவே அமெரிக்காவில் இந்த ஏற்பாடுகள் போலும்! டாக்சிக்கார்கள் நியூயார்க் நகரத்து வாடகைக் கார்களைப் பற்றியும் சிறிது அறிந்துகொள்வோம். வாடகைக் கார் வேண்டுபவர் டாக்சி கம்பெனிக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கின்றனர். அந்த அலுவலகத்தில் ஆர்டர்களைப் பதிவுசெய்து, அறி விப்பாளர் அவற்றை ஒலிபரப்புங் கருவியின்முன் படிக் கிறார். அந்தக் கம்பெனியைச் சேர்ந்த வாடகைக்கார்களும் ரேடியோ - டெலிபோன் கருவி இருப்பதால், அவற்றை ஓட்டுபவர்கள் அதன்மூலம் செய்தி அறிந்து, அலுவலகக் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். இந்த முறையால் ஒரு பயணம் முடிந்தபின் வாடகைக்கார் அங்கிருந்த வாறே நேரே மற்றொரு பயணி இருக்கும் இடத்துக்குச் செல்லுகிறது. - நகர அமைப்பின் அழகு எனது துறைமுகத்திலிருந்து, எட்டு கி. மீ. தூரத்திலுள்ள ஹோட்டலுக்குச் செல்ல கார் ஓரிடத்தில் மட்டுமே திரும்பிற்று : எஞ்சிய தூரமெல்லாம் நேராகவே சென்றது. இதிலிருந்து இந்நகர அமைப்பின் சிறப்பும் புலனாகும். 300 ஆண்டுகளுக்குமுன், டச்சுக்காரர் இருபது டால் ருக்கு வாங்கிய 308 சதுரமைல் பரப்புள்ள பகுதியாகிய நியூயார்க் இன்று கண்டோர் வியப்புறும் நகரமாகத் திகழ் கின்றது. அகலமான, ஒழுங்கான வீதிகளும் அவற்றின் இருமருங்கிலும் அணி அணியாகக் கட்டப்பெற்ற மாளிகை களும் உலகிலேயே சிறந்த நகரமைப்புத் திட்டத்தின் சிறப்பை விளக்குகின்றன. கிழக்கு-மேற்குச் சாலைகளுக்கு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/15
தோற்றம்