148 ஆராய்ச்சி அமெரிக்கப் பேங்குகளில் பொருளாதார அறிஞர்களும் ஆராய்ச்சியில் வல்லுநரும் பெரும் பதவிகளில் உள்ளனர் இந்த அறிஞர்கள் பேங்குத் தொழில் பற்றி ஆராய்ச்சி புரிகின்றனர், பல்கலைக் கழகங்களில் வாணிப முறை கற்கும் மாணவருக்குச் சொற்பொழிவுகள் நிகழ்த்துகின்றனர். புள்ளி விவரங்களைச் சேகரிக்கவும், ஏற்றுமதிக்கு ஆக்கம் தரவும், எந்த விஷயத்தைப்பற்றியும் வாடிக்கைக்காரர் களின் கேள்விகளுக்கு விடை கூறவும் வெளிநாட்டு வணி கரைப்பற்றிய விவரம் தெரிவிக்கவும் தனித்தனிப் பகுதிகள் அமெரிக்கப் பேங்குகளில் இருக்கின்றன. அமெரிக்காவில் மற்ற அலுவலகங்களிற்போல பேங்கு களிலும் பல பணிகளைச் செய்பவர்களுக்கு மரியாதையான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் செக்கு களில் கோடிடுவதும், அவற்றைக் கணக்கில் போடுவதும் இல்லை. 'லிமிடெட் கம்பெனி'க்குக் கொடுக்கப்பட்ட செக்கு களை மட்டும் கணக்கில்தான் போடவேண்டும். மற்றச் செக்குகளைக் கணக்கில் போட வேண்டுமென்ற கட்டாய மில்லை. அமெரிக்க அரசியலாரின் பெடரல் ரிசர்வ் பேங்குக்கு அடுத்தபடி அங்குள்ள பெரிய பேங்குகள்-பேங் ஆப் அமெரிக்கா, நேசனல் சிட்டி பேங், சேஸ் நேசனல் பேங் மானுபாக்சரர்ஸ் ட்ரஸ்ட் ஆகியவை. இவை ஒவ்வொன்றும் ஓராயிரம் கோடி ரூபாய்வரை வரவு செலவு செய்கின்றன; சுவிட்சர்லாந்து நாட்டின் தங்கக் கட்டிகளையும் இந்தப் பேங்கு களே பாதுகாக்கின்றன: எனினும், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் பேங்குகளில் பண இருப்பு மிகக் குறைவாகவே இருப்பதாக ஒரு நண்பர் கேலியாகச் சொன்னார். பேங்குகளில் கணக்குள்ள ஒவ்வொருவரும் வார இறுதிச் செலவுகளுக்காகப் பணத்தைப் பேங்கி லிருந்து வெள்ளிக்கிழமையன்று வாங்கி விடுகின்றனராம்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/149
தோற்றம்