147 ஒரு பிரயாணி தனக்குத் தன் பிரயாணத்தில் செலவுக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கும் தொகையை ஒரு பேங் கில் முன்னதாகக் கொடுத்தால், அந்தப் பேங்கிலிருந்து பல அளவுகளில் அந்தத் தொகைக்குச் செக்குகள் தருவார்கள். அப்போதே பணம் செலுத்தியவர் அவை ஒவ்வொன்றிலும் மாதிரிக் கையெழுத்துப் போட வேண்டும். பின்னர் தனக்குப் பணம் வேண்டும்போது, வேண்டும் அளவுக்குச் செக்குகளைப் பணமாக அந்தந்த நாட்டில் வழங்கும் நாண யத்தில் மாற்றிக் கொள்ளலாம். யாரிடம் பணம் பெற்றுக் கொள்கிறாரோ, அவருடைய முன்னிலையில் பிரயாணி கை யெழுத்திட வேண்டும். அந்தக் கையெழுத்து மாதிரிக் கையெழுத்தைப் போன்றே இருக்க வேண்டும். எந்தக் கடையிலும் ஹோட்டலிலும் இந்தச் செக்குகள் செல்லுபடி யாகின்றன. பேங்குகளிலும் அவற்றுடன் இணைந்த அலுவலகங்களிலும் நொடிப் பொழுதில் இந்தச் செக்கு, களுக்குப் பணம் பெற இயலும். வெளியீடுகள் நான் நியூயார்க் நகரையடைந்த அன்று, ஐக்கிய அமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள கனடா நாட்டைச் சேர்ந்த 'பேங் ஆப் மாண்ட்ரீ'லிருந்து ஒரு கடிதமும் கண்ணைக் கவரும்படியாக அச்சிடப்பட்ட அவர்களுடைய வெளியீடான 'இன்றைய கனடா' (Canada Today) என்ற 100 பக்கங்கள் கொண்ட புத்தகமும் எனக்கு வந்தன. கனடா, உலகின் மூன்றாவது பெரிய வியாபார நாடு என் றும், சமீப காலத்தில் வியத்தகு முன்னேற்றம் அடைந் திருப்பதாகவும், ஆகையால் நான் கனடாவுக்கும் வர வேண்டுமென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 130 ஆண்டுகளாகக் கனடாவும் பேங் ஆப் மாண்ட்ரீலும் இரட்டைக் குழந்தைகள் போல வளர்ச்சியடைந்திருப்பதாக. வும் அக்கடிதத்தில் கண்டிருந்தது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/148
தோற்றம்