146 வில் இருந்தவாறே திறக்கலாம். இவ்வாறு திறந்ததும்.. பணத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாடிக்கைக் காரர் அதனுள் தபால் பெட்டிக்குள் தபால் போடுவது. போலப் போட்டுவிட்டுப் பூட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.. பேங்கு திறந்ததும், பேங்கு அலுவலர் இத்தொகைகளை எடுத்து உரியவர் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்வர். பணம் செலுத்தியவர் அன்று பேங்கிலிருந்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவிலும் பெரு நகரங்களில் சில பேங்கு. கள் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளனர். கிளைகள் ஆகாய விமானங்களில் செல்லும் பிரயாணிகளுக்கு . உதவியாகப் பேங்குகளின் கிளைகள் விமான நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு நாணயம் எடுத்துச் செல்லுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இக் காலத்தில் இருப்பதால், ஆகாய விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் பேங்குகள் இருக்க வேண்டியது இன்றி யமையாதது. நான் கொழும்புக்குப் புறப்பட்டபோது சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்தது. உடன் வந்த பிரயாணி சட்டத்தில் அனுமதிக்கப்படுவதற்கு. மேற்ப்பட்ட நாணயம் வைத்திருந்தார்; அதனால் சுங்கச் சோதனையாளர் அதைக் கொண்டுபோக அவரை அனு மதிக்கவில்லை; அந்தப் பிரயாணியை வழியனுப்ப ஒருவரும். விமான நிலையத்துக்கு வரவில்லை; அதனால், அவர் எஞ்சிய பணத்தைச் சுங்கச் சோதனையாளரிடம் ரசீது இன்றியே கொடுத்துவிட்டு அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளும் படி தம் உறவினருக்குத் தெரிவிக்க நேர்ந்தது. அமெரிக்கா வில் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறா. பிரயாணிகளுக்கான செக்குகள் பிரயாணிகளுக்கு அமெரிக்காவில் பேங்குகள் செய்யும் உதவிகள் பலதரப்பட்டவை. இவற்றுள் குறிப்பிடத் தக்கது, 'டிராவலர்ஸ் செக்' (Travellers Cheque) என்பது..
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/147
Appearance