145 கின்றன. வாடிக்கைக்காரர்களுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதிப் புத்தகங்கள் (passports) வாங்கிக் கொடுத்தல், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தபால்களை வாங்கி வைத்திருந்து அவர்களிடம் சேர்ப்பித்தல், ஹோட்டல்களில் அவர்கள் தங்குவதற்கு இடவசதிகள் செய்தல் போன்ற பணிகளையும் அமெரிக்கப் பேங்குகள் செய்கின்றன. பல அமெரிக்கப் பேங்குகள் வாடிக்கைக்காரர் ஒவ்வொரு வருக்கும் ஒரு நாட்குறிப்பு வைத்திருக்கின்றன. அப் புத்தகத்தில் அவர்கள் தம் பேங்குக்கு வந்ததையும் கேட்டுக்கொண்ட செய்திகளையும், இன்ன பிற விவரங் களையும் குறித்துக் கொள்ளுகின்றன. வாடிக்கைக்காரர்கள் பேங்குக்கு வந்திருக்கும்போது மழை பெய்தால், அவர்கள் உபயோகத்துக்காகச் சில அமெரிக்கப் பேங்குகள் அவர் களுக்கு ஐந்து நாட்களுக்குக் கடனாகக் குடை கொடுக்கின் றன. ஓர் அமெரிக்கப் பேங்கு, நகரப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒரு மண்டபமும் அதன் அலுவலகத்திலேயே கட்டி யிருக்கிறதாம்! இரவிலும் பணம் செலுத்தலாம் நம் நாட்டில் பேங்குகளில் அவற்றின் அலுவலக நேரத்தில் மட்டுமே பணம் செலுத்த இயலும். பேங்கு மூடிய பின்னரும், பேங்கு விடுமுறை நாட்களிலும் பெரும் தொகைகளை வருமானமாகப் பெரும் கடைகளும், ஹோட் டல்களும் சினிமாக் கம்பெனிகளும் மீண்டும் பேங்கு திறக் கும்வரை தம்மிடமே ரொக்கத்தை வைத்துக்கொள்ளுவது விரும்பத்தக்கதன்று. ஆகையால், எந்த நேரத்திலும் பேங் கில் பணம் கட்ட உதவும் ஏற்பாடு அமெரிக்காவிலும், ஏனைய சில நாடுகளிலும் உள்ளது. இதற்கு 'நைட் சேப்' (Night Safe) 67 60T my பெயர். இதைப் பயன்படுத்த விரும்புவோர் முன்னேற்பாடு செய்து, பேங்கு நிர்வாகிகளிட மிருந்து ஒரு சாவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் சாவியின் உதவியால், பேங்கின் 'நைட் சேப்' கதவைத் தெரு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/146
தோற்றம்