உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஒரு நிமிடத்திலேயே பணம் ! எதையும் ஆகாயவிமான வேகத்திற் செய்யும் ஆற்ற லுள்ள அமெரிக்கரிடமிருந்து, பேங்கு வாடிக்கைக்காரர் கள் முதலில் தெரிந்து கொள்வது, அமெரிக்கப் பேங்கு களில் ஒரு 'செக்' குக்குப் பணம் வாங்க ஒரு நிமிடந்தான் ஆகும் என்பது; பேரேடுகளை வைத்திருக்கும் ஒவ்வொரு வரிடமும் பண இருப்பும் இருப்பதால் இந்த முறை அங்கே நிகழுகிறது. பலவாறான பணிகள் அடுத்தபடியாக நாம் அறிவது, பொருள் ஈட்டுவதில் கவனமாயிருக்கும் அமெரிக்கர் நேரடியாக அதை செய் யாது, அதற்கு முதற்படியாகப் பலவாறான தொண்டுகளைப் பேங்குகள் வாயிலாக மக்களுக்குச் செய்து, அவற்றின் மூலம் அவர்களைத் தம் வசப்படுத்துவதாகும். சான்றாக, பல் அமெரிக்கப் பேங்குகள் மாதந்தோறும் அச்சிட்ட கடிதங்களை வாடிக்கைக்காரர்களுக்கு அனுப்புகின்றன. இக்கடிதங்களில் பொருளாதார நிலவரம், அரசியலாரின் செல்வநிலை,வாணிக நிலைமை ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. வாடிக்கைக்காரர்களுக்குப் பயன்படும் வகையில் பல புத்தகங்களையும் அமெரிக்கப் பேங்குகள் வெளியிடுகின் றன். அமெரிக்காவிலுள்ள வியாபார இடங்களையும், பேங்குகளையும் வாடிக்கைக்காரர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம், செக்கை எவ்வாறு எழுதவேண்டும், வியாபாரத்திற்கு அனுப்பும் சரக்குகளுக்குப் பணம் பெற எப்படி உண்டியல்களைத் தயாரிப்பது என்பவை பற்றிச் சிறு சிறு வெளியீடுகளில் விளக்கப்பட்டிருக்கும். சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகளை எளிதில் விளக்கிக் கூறும் சிறு புத்தகங்களையும் அமெரிக்கப் பேங்குகள் வெளியீடு கின்றன; இவைகளையெல்லாம் இனாமாகவே வழங்கு