உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 மென்ற ஓர் எண்ணம் நம்நாட்டு மக்களிடையே இருக் கிறது. இது முற்றிலும் தவறானது. மக்களின் அறிவு வளர்ச்சியால், கற்பனையிற் காணும் கருவிகளை எல்லாம் விஞ்ஞானம் உருவாக்கி விடுகிறது. டெலிவிஷனுக்குச் சாவு மணி அடிக்கும் முறையில் கலர் டெலிவிஷன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல முன்னேற்றங்கள் மிக வேகமாக நடந்தவண்ணமிருந்தும், திரைப் படங்கள் மீது மக்களுக்குள்ள ஆசை தணிவதாயில்லை. டெலிவிஷன், வானொலி நிலையங்கள், பத்திரிகைகள், தியேட்டர்கள் ஆகிய அனைத்துமே அமெரிக்காவில், ஒருசில வாணிகக் குழுவினரிடமே இருப்பதால், அவர்கள் தம் செல்வத்தா லும், அரசியலாரிடம் தமக்குள்ள செல்வாக்காலும், சூழ்ச்சி யாலும், தம்மிடமுள்ள கருவிகளுக்குள் ஒன்றுக்கொன்று போட்டியில்லாமல் செய்துவிடுகின்றனர். ஆகாய விமானம் கப்பல்கள் பயனற்றுப் பின்பு, வந்துவிட்ட போய் விட்டனவா? அல்லது, மோட்டார் வந்துவிட்டதால், நம் கிராமத்துக் கட்டை வண்டிகள் இல்லாமற் போய்விட் டனவா? பரந்த மக்கட் குழுவிலே ஒவ்வொரு கருவியை யும் ஆதரிக்கும் பகுதியினர் இருப்பது இயற்கையே. ஒவ் வொரு 'ரோமியோ' வுக்கும் ஒரு 'ஜூலியட்' டென்று ஷேக்ஸ்பியர் சொல்லி இருக்கிறார் அல்லவா? 13. பேங்குகள் பேங்குகள் உண் மிகவும் பொருளாதார வளர்ச்சிக்குப் இன்றியமையாதவை. ஒரு நாட்டில் உலோகங்களும் மற்ற வாணியப் பொருள்களும் மிகுதியாக இருப்பினும், சிறந்த பேங்குகள் இல்லாவிடில், அந்த நாட்டின் முன்னேற்றம் தடைப்படுவது கண்கூடு. அமெரிக்கா இன்று பொருளா தாரத் துறையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றிச் சிறந்து விளங்குவதற்கு அந்த நாட்டின் பேங்குகள் காரணம் என்று கூறலாம்.