டிராவலர்ஸ் செக் 152 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒரு மட்டுமன்று; ஒரு பேங்கும் ஆகும். பிரயாண ஸ்தாபனம் இந்தப் பேங்கு ஜெர் மனியீன் அமெரிக்கப் பகுதியில் அரசினரின் பேங்காக இருக்கிறது. 'டிராவலர்ஸ் செக்' என்பதை ஏற்படுத்தி, அதை முதன் முதலில் உலகில் வழங்கியவர்கள் இக்கம் பெனியாரேயாவார். 100 ரூபாய்க்கு டிராவலர்ஸ் செக் கொடுக்க இவர்கள் வாங்கிக்கொள்ளும் கட்டணம் ஒரு ரூபாய் இக்கம்பெனியார் கொடுக்கும் டிராவலர்ஸ் செக் உலக முழுவதும் செல்லுபடியாகும் நாணயமாக இருக்கிறது. உலகின் பல நகரங்களில் உணவுச்சாலைகள், ஹோட்டல்கள், ரயில் நிலையங்கள், தந்தி அலுவலகங்கள், பேங்குகள் ஆகிய வற்றிலெல்லாம் "இங்கே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் செக் ஏற்றுக்கொள்ளப்படும்" என்ற அறிவிப்புப் பலகைகளைக் கண்டேன். காணாமற் போன செக்குகளுக்குப் பணம். கொடுக்க இக்கம்பெனியார் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பாவில் பல ஆயிரம் பேர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் டிராவலர்ஸ் செக்குகளைப் புதைத்து வைத்திருந்தனர்; புதைத்த இடம் தெரியாததால் அவர்கள் அவைகளைப் பயன்படுத்தவில்லை. அவர்களில் டிராவலர்ஸ் செக் வாங்கியதாக ஆதாரம் காட்டியவர்களுக்கு, போர் முடிவில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பணம் கொடுத் தது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பெனியின் ரயில் பிரயாண அலுவல்களை அமெரிக்காவில் பார்த்துக் கொள்ளுவது "ரயில்ரோடு எக்ஸ்பிரஸ்" என்ற ஸ்தாபனமாகும். இந்தக் குழு இப்போது அமெரிக்க ரயில் கம்பெனிகளுக்குச் சொந்த மாயுள்ளது. உலக முழுவதும் அலுவலகங்கள் அமெரிக்காவுக்கு வெளியே அமெரிக்கன் எக்ஸ்பிரசுக்கு 139 நகரங்களில் அலுவலகங்களும், பல்லாயிர நகரங்களில் ஏஜண்டுகளும் உண்டு. பாரிஸ் நகரில் 'ரூஸ்கிரைம்?
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/153
தோற்றம்