153 (Ruescribe) ரூ என்றால் பிரெஞ்சு மொழியில் 'சாலை' என்று பொருள்) என்னும் சாலையிலுள்ள ஆறுமாடிக் கட்டிடத்தில் முழுவதும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் இருக்கிறது. அங்கேதான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பெனியைப் பற்றி அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலுவ பிரெஞ்சிலிருந்து வேற்று மொழிகளில் மொழிபெயர்ப் பவர்கள் பலர் இந்த அலுவலகத்தில் இருக்கின்றனர். பிர யாணிகள் ஒருவரை ஒருவர் இக்கட்டிடத்தில்தான் சந்திப் பதாக முடிவு செய்வது வழக்கம். தத்தம் நாடுகளிலிருந்து வரும் தபால்கள் இந்த அலுவலக விலாசத்திற்கு வருமாறு பிரயாணிகள் ஏற்பாடு செய்கின்றனர். இந்த லகத்துக்குச் சென்று கடிதங்களைப் பெற்றுக் கொள்ளு கின்றனர்; வேறு விலாசத்துக்குத் தம் கடிதங்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக்கொள்வதும் உண்டு. தமக்கு உடனடியாகத் தேவைப்படாத பெட்டிகளையும்,ஏனைய பொருள்களையும் இவ்வலுவலகத்திலேயே பிரயாணிகள் வைத்துவிட்டுச் செல்லுவர். பாரிஸ் நகரைச் சுற்றியுள்ள பல அரிய காட்சிகளைப் பற்றி விளக்கம் கூறுபவர்கள் இருக்கிற கார்களில் நாள்தோறும் மூன்று தடவை யாணங்களை இக்கம்பெனியார் ஏற்பாடு செய்கின்றனர். உடல் நலமில்லாதிருந்தால் எந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறலாம், என்னென்ன பொருள்களை எங்கெங்கே வாங்க லாம், என்பன போன்ற பல தகவல்களையும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஊழியர் நாள்தோறும் பல ஆயிரம் பிரயாணி களுக்குத் தெரிவிக்கின்றனர். கப்பல்கள், ஆகாய விமானங் கள், சர்வதேச ரயில்கள் ஆகியவை வந்து சேரும் இடங்களி லெல்லாம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பெனியின் பிரதிநிதி களை தயாராக இருந்து, பிரயாணிகளை வரவேற்றுப் புதிய நாட்டில் அவர்களுக்கு உதவி செய்கின்றனர். V பிர தம்மால் செய்ய இயலாத உதவிகளைப் பிரயாணியின் நாட்டுத் தூதர் வாயிலாகச் செய்து தரவும் இவர்கள் முயலுகின்ற னர்; பிரயாணிகளின் பொருள்களை எந்தத் துறைமுகத்துக் கும் கப்பலில் அனுப்பவும் ஏற்பாடு செய்கின்றனர். 10-அ
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/154
தோற்றம்