உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நிகழ்ச்சி 154 சுவிட்சர்லாந்தில் 'லுசர்ன்' (Lucerne) என்ற அழகிய நகரில் இந்த அலுவலகத்தார் சிறப்பாக ஏற்பாடு செய்த மலைக் காட்சிப்பிரயாணம் ஒன்றில் அவர்களுடைய 'கோச்' என்னும் காரில் 25 பிரயாணிகளுடன் நானும் ஒருவனாகச் சென்றேன்; எனது மழைக் கோட்டையும் உடன் எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் அன்று மழை பெய்யாததால், அந்தக் கோட்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற் படவில்லை. பல இடங்களில் இறங்கி, ஆங்காங்குக் காட்சி களைப் பார்த்துவிட்டு மீண்டும் கோச்சில் ஏறிக்கொண்டேன். பிரயாணம் முடிந்ததும், நான் என் மழைக் கோட்டைக் காரிலேயே வைத்துவிட்டு, மற்றப் பிரயாணிகளிடமிருந்து விடை பெற்றுக்கொண்டேன். இரண்டு மணி நேரம் லூசர்ன் கடைவீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு, எனது ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு அமெரிக்கன் எக்ஸ் பிரஸ் ஊழியர் ஒருவர் என்னுடைய மழைக் கோட்டுடன், எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்! 'கோட் இருந்த இடத்திலிருந்து அது என்னுடையது என்று முடிவு செய்து. பல ஹோட்டல்களை டெலிபோன் மூலம் விசாரித்து, நான் தங்கியிருந்த ஹோட்டலை அறிந்து கொண்டதாக அவர் சொன்னார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்கின் றன என்பதையும் எனது மழைக் கோட்டின் விலை அந்த நாளி லேயே ரூ.100 என்பதையும் இங்கே தெரிவிக்கவிரும்புகிறேன். அலுவலரின் குணச் சிறப்புக்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரசின் செல்வாக்குக்கு காரணம் அந்தக் கம்பெனியிலுள்ள அலுவலரின் நாணயமும், பொறு மையும், கடமை உணர்ச்சியும், சிரித்த முகமும் இனிய குணங்களும் ஆகும். நம் நாட்டில் பல அலுவலகங்களில் ஈடுபட்டிருப்பவர்களும், குறிப்பாக அரசினரின் ஊழியரும் இந்த நற்குணங்களைப் பின்பற்றுவது குடியரசு இந்தியாவின் வருங்காலத்துக்கு மிக மிக இன்றியமையாதது.