156 களை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த வழியின் இறுதி யிலுள்ள ஒருவர் தட்டில் எடுத்து வைக்கப் பட்டிருக்கும். உணவுகளைப் பார்த்து, அவற்றின் விலையைக் கணக்கிட்டு, வாடிக்கைக்காரரிடம் டிக்கட் தருவார். அவர் அருகேயுள்ள மற்றொருவரிடம் பணம் கொடுத்துவிட்டு, எந்த இடத்திலா வது உட்கார்ந்து உணவை உட்கொள்ளலாம். கத்தி, கரண்டி குத்துமுள் (Fork), தண்ணீர் முதலியனவும் கையைத் துடைக்கக் காகிதக் கைக்குட்டையும் அங்கே வைக்கப்பட்டி ருக்கும். பரிமாறுபவர்களின் விரைவின்மைக்கு மாற்றாக. அமெரிக்கர் இம்முறையைக் கண்டு பயன்படுத்தி வருகின்ற னர். . ஆட்டோமாட் என்ற பெயருள்ள சிற்றுண்டிச்சாலையில் எப்போதும் சூடான அலமாரிகளில், சிறிய கண்ணாடிக் கத களுக்குள், சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் உணவின் விலையும் அந்தந்த உணவு வைக்கப்பட்டிருக்கும். பகுதியின் முன்பக்கக் கதவின் அருகே குறிக்கப்பட்டிருக்கும். உரிய விலையை அதே மதிப்புள்ள நாணயமாக, விலை குறிக் கப்பட்டிருக்கும் இடத்துக்கு அருகேயுள்ள ஓர் இயந்திரத்தில் போடவேண்டும். உடனே, தானே கைப்பிடியைத் திருகிக் கொண்டு, அந்தக் கதவு திறந்து கொள்ளும். இருக்கும் உண ணவுப் பொருளைப் பணம் போட்டவர் எடுத்துக் கொள்ளலாம். இந்த அமைப்புள்ள ஆட்டோமாட் கருவிகள் ஒரு சில நகரங்களில் மட்டுமே உள்ளன. உள்ளே பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் அலுவலகங்களி லும் பேங்குகளிலும் சிறு உணவுச்சாலைகள் உள்ளன குறிப்பாக, மருந்துக் கடைகளில் உணவு விற்கும் பகுதி ஒன் றுண்டு. இதற்கு லஞ்ச் கவுண்டர், அல்லது லஞ்சனட் (Luncheonette) என்று பெயர். எக்ஸ்சேஞ்ச் பஃபே என்ற உணவுச்சாலையில் உணவு உட்கொள்ளுபவர்கள் தாம் எவ்வளவு பணம் பெறுமான முள்ள உணவை உண்டனர் என்பதைப் பணம் பெற்றுக்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/157
Appearance