158 உதாரணமாக, 825-ஆவது அறை என்றால், எட்டாவது மாடியில் 25-ஆம் எண்ணுள்ள அறை என்று பொருள்படும். ஒவ்வோர் அறையிலும், பல மேசைகளும் நாற்காலி களும், கட்டிலும் (சில ஹோட்டல்களில் ஒருவருக்கே இரண்டு கட்டில்களும்) குளிர்காலத்தில் அறையைச் சூடாக்கிக். கொள்ள மின்சார நெருப்பைத்தரும் கருவியும், டெலிபோன் கருவியும், (சில ஹோட்டல்களில்) வானொலிக் கருவியும் தொலைக்காட்சிக் கருவியும் வைக்கப்பட்டிருக்கும். கூடுத லாகக் கட்டணம் செலுத்தினால், தங்கும் அறையிலேயே உணவு படைப்பர். வேலையாட்கள் அறைக்குள் புகாமலே அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு செல்லவும், சலவை யான துணிகளைத் திருப்பித் தரவும் ஏற்ற, அமைப்புக்களு டைய கதவுகள் இந்த அறைகளில் உண்டு. ஏதாவதொரு வேலையை முன்னிட்டு, காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத் தில், துயிலெழவேண்டுமென்று நாம் விரும்பினால், ஹோட்டல் அலுவலகத்தில் டெலிபோன் இயக்குபவரிடம் அறிவிக்க வேண்டும். உரிய நேரத்தில் அவர் டெலிபோனில் அழைப் பார். டெலிபோன் மணி அடிக்கும் ஓசையைக் கேட்டு நாம் எழுந்து விடலாம். கூடுதலான கட்டணம் செலுத்துபவர்களுக்கு, நீராடும் அறையுடன் கூடிய பெரிய அறை கொடுக்கப்படும். மற்றவர் கள் 8 அல்லது 10 அறைகளுக்குப் பொதுவாயுள்ள நீரா டும் அறைகளையே பயன்படுத்த வேண்டும். நீராடும் அறை களில், தண்ணீர் வெந்நீர் ஆகியவற்றில் விதவிதமாய் நீராட அமைப்புக்களும் தொட்டியும் உண்டு. பெரிய கண்ணாடிகளும் மலம் கழிப்பதற்கான கருவிகளும், கை முகம் ஆகியவற்றை கழுவ நீர்த் தொட்டி (Wash-basin) களும் இருக்கும் பலவகையான உபயோகங்களுக்கு ஏற்ற தனித்தனி சோப்பு : களும் *டவல்களும் நாள்தோறும் புதிது புதிதாக வைக்கப் சராசரியில் ஓராண்டிற்கு ஒரு நபருக்கு இந்தியாவில் ஒரு கிலோ நிறையுள்ள சோப்பும், அமெரிக்காவில் 10 கிலோ நிறையுள்ள சோப்பும் செலவாகிறது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/159
தோற்றம்