உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 பட்டிருக்கும். நீராடும் அறையில் நல்ல பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இனிமையான சூழ்நிலையும் சுகாதார மான அமைப்புக்களும் உண்டு. அமெரிக்கருடைய வீடுகளி லும் நீராடும் அறை இவ்வாறே அமைக்கப்பட்டிருக் கிறது. பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் செய்தி அறிவிக் கும் (தானே டைப் அடிக்கும்) டெலிபிரிண்டர் என்ற இயந் திரம் ஒவ்வொரு ஹோட்டலிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 'லவுஞ்சு' என்ற பெயருடன் பெரியதோர் மண்டபம் எல்லா ஹோட்டல்களிலும் இருக்கும். நண்பர்கள் கூடிப் பேசுவதற்காக இது பயன்படுத்தப்படும். பெரிய வியாபாரங் கள் எல்லாம் 'லவுஞ்சு'களில்தான் முடிவாகின்றன. மாநாடு கள், அரசியல் நிகழ்ச்சிகள், விருந்துகள் எல்லாம் ஹோட்டல்களிலேயே நடப்பதால், வாழ்க்கையின் நடு நாயகமான இடமாக ஹோட்டல்கள் விளங்குகின்றன. ஹோட்டல் அலுவலகத்தில், தமக்கு வந்திருக்கும் கடிதங்கள் முதலியவற்றை அங்குத் தங்கியிருப்பவர்கள் விசாரித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாள் என் னுடைய தபால்களுடன் ஒரு தந்தியும் எனக்குக் வந்திருந் தது. அவற்றைப் பெற்றுக்கொண்டு, நான் என் அறைக்குச் சென்றேன். என் அறைக் கதவில் பூட்டுக்கு அருகே யிருந்த கைப்பிடியில் ஓர் அட்டை தொங்கியது. அந்த அட்டையில் கீழ்க்கண்டவாறு அச்சிடப்பட்டிருந்தது: "உங்களுக்கு ஒரு தந்தி வந்திருந்ததே, அதை வாங்கிக் கொண்டீர்களா?” ஹோட்டலில் தங்குபவர்கள் கடிதம் எழுதவும், மற்ற உபயோகங்களுக்கும் பல அளவுகளில் விதவிதமான தாள் களும் ஹோட்டலின் படம் போடப்பட்ட கார்டுகளும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. நகரத்தின் வரைப் படத்தை வாடிக்கைக்காரர்களுக்கு வழங்கும் ஹோட்டல்