16. 163 உணவு நம் உணவும் அமெரிக்கரின் உணவும் அமெரிக்கரின் உணவுக்கும் நம் உணவுக்கும் முக்கிய மான வேறுபாடு, அவர்களுடைய உணவு பலதரப்பட்டிருப் பதேயாகும். நமது உணவு முழுமையும் அரிசி மயமாகவே இருக்கிறது. பகல், இரவு உணவுகள் முற்றிலும் அரிசியே ஆகும். சிற்றுண்டியிலும், அரிசியையே பல உருவங்களில் உண்கிறோம். அமெரிக்கர் சில பணியாரங்கள், * (Puddings, 'சோமாஸ்' ஆகிய உணவுகளைத் தயாரிப்பதற்கு மட்டிலுமே அரிசியைப் பயன்படுத்துகின் றனர்; பலவகைத் தானியங்கள் கலந்த, சத்துள்ள உணவை உட்கொள்ளுகின்றனர். அவர்கள் சராசரியில் தலைக்கு ஒரு கிலோ தேயிலையும், 13 கிலோ காப்பியும், 16 கிலோ வெண்ணெயும் (நெய்யை அவர்கள் உட்கொள்வதில்லை), 175 கிலோ சர்க்கரையும், 75 கிலோ புலாலும், 100 கிலோ கோதுமையும் ஆண்டு தோறும் உணவாக உட்கொள்ளுகின்றனர். இனிப்பு உட்கொள்ளுவது நமது நாட்டில் இனிப்பை முதலில் உண்டு, பின்னர்க் காரத்தை உட்கொள்ளுவது முறையாக இருக்கிறது. அமெரிக்கர் இம்முறை பிறழ்ந்து உண்பர். இனிப்புக்கு மற்ற உணவுகளின்மீது விருப்பமில்லாமல் செய்யும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுவதாலேயே, அமெரிக்கர் இனிப்பை இறுதியில் உண்கின்றனர். எந்த உணவிலும் எண்ணெய் சேர்க்கும் வழக்கம் அமெரிக்காவில் இல்லை. எண்ணெய் சேர்ப்பதால், உணவு எளிதாகச் செரிப்பதில்லை என்று அமெரிக்கர் கூறுகின்றனர்... அமெரிக்காவில் எதையும் தாளிப்பதோ பொரிப்பதோ இல்லை.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/164
தோற்றம்