164 மற்ற நாட்டு உணவுகளில் விருப்பம் அமெரிக்கர் மற்ற நாட்டவரின் உணவுக களின்மீது வெறுப்புக் காட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவிலுள்ள சீன ஹோட்டல்களைப் போர்க்காலத்தில் அங்குச் சென்ற அமெரிக்க வீரர்கள் ஆதரித்ததால்தான், இன்று அவை செல்வச் சிறப்புடன் மிளிர்கின்றன. போர்க்காலத்தில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க இராணுவத்தார் இந்திய உணவுகள் பலவற்றை உண்டனர். சிறந்த வெண்ணெயுடன் பிசைந்த நல்ல அமெரிக்க மாவு (இதுதான் இப்போது மரிக்கன் மாவு என மருவி வழங்குகிறது போலும்) மின்சார அடுப்பின் அசையாத நெருப்பில் 'புஸ்' என்று பொன் நிறப் பூரியாவது அமெரிக்கருக்கு வியப்பாகவே இருக் கிறது. இந்தியாவில் சிலகாலம் தங்கிய ஓர் அமெரிக்கர் "இட்டிலி என்பது ஒரு சிறந்த சிற்றுண்டி. சாம்பார் என்னும் கடலில், இட்டிலி ஒரு நீர்மூழ்கி போல ஒளிந்து கொண்டி ருக்கிறது" என்று ஓர் அமெரிக்கப் பத்திரிகையில் எழுதி யிருந்தார். இங்கு, "இட்டிலி யென்பது இனிய உணா; மற்றதனை ஒட்டி நுகர்வதுசாம் பார்" என்னும் கேலிப்பாடல் நினைவில் வருகின்றது. இட்டிலி யைப்போலவே, அப்பளமும் இந்தியாவில் தயாரிக்கப்படும் காப்பியும் பெயர்பெற்றவை. ஆகையால், அமெரிக்காவில் இவை கிடைக்க ஏற்பாடு செய்வது, நம் அரசினரின் டாலர் பற்றாக்குறையைச் சரிக்கட்ட எளிதான், அனுபவ சாத்திய மான,உடனே பலன் தரத்தக்க வழியாகும். புட்டியில் அடைத்த உணவுகள் (Tinned Goods) வழக்கமாக உண்ணும் உணவு வகைகள் நீங்கலாக, புட்டியில் அடைத்த பல உணவுப் பொருள்கள், அமெரிக்கா வில் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. வேகவைத்து
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/165
தோற்றம்