உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 நிமிடங்களில், சூடான பாலிலோ நீரிலோ கலந்து சாப்பிடும். படி பக்குவப்படுத்திய நிலையில் பல 'ரெடிமேட்' உணவுகளைக் கெல்லாக' போன்ற குழுக்கள் அமெரிக்காவில் தயாரிக்கின் றன ஹோட்டல்களில் இரவு உணவு உட்கொள்ளுபவர் கள் குறித்த உடைகள் அணியவேண்டும். இரவு உணவு க்குப் பின்னர், நடனம் நடைபெறுவதாலேயே இந்த ஏற்பாடு போலும். வேலை மிகுதியாலோ, வேறு காரணத்தாலோ ஓய்வு நாட்களில் அமெரிக்கரில் சிலர் காலைச் சிற்றுண்டி பகல் உணவு இரண்டையும் ஒன்றாக்கிக் காலை 10 மணி அளவில் உண்பர். இந்த உணவின் அளவு சிற்றுண்டியை விட மிகுதியாகவும் பகலுணவை விடக் குறைவாகவும் இருக்கும். இதற்கு 'பீரேக்பாஸ்ட், லஞ்ச்' (Break-fast. Lunch) என்ற இரு சொற்களின் முதல் கடைப்பகுதிகளைச் சேர்த்துப் 'பிரெஞ்ச்' (Brunch) எனப் பெயர் வழங்குகின் றனர். இரவு உணவை அமெரிக்கர் 6-30 மணிக்கே உண்பது நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மற்ற நாட்டினர் பலரும் இவ்வாறே செய்கின்றனர். நம் நாட்டில், குறிப்பாக நகரங் களில் வாழ்பவர்கள், தம் உடல் நலத்தைக்கருதி, இயன்ற அளவு முன்னதாக இரவு உணவை உட்கொள்ளலாம். அமெரிக்கரின் இருக்கும்;- அன்றாட உணவு பின்வருமாறு காலைச் சிற்றுண்டி:--சீமை அவல் அல்லது கோதுமைப் பாயாசம் போன்ற ஓர் உணவு (Porridge); ரொட்டி; 2முட்டை கள் அல்லது மீன்; ஏதாவது ஒரு பழம் (சிட்ரஸ், பீச்சஸ், அவித்த ஆப்பிள்): காப்பி. பகல் உணவு:-சூப் (பெரும்பாலும் இறைச்சி சேர்ந் தது); இரண்டு வகை இறைச்சி; வெள்ளரிக்காய்ப் பச்சடி; உருளைக்கிழங்கு; காலிபிளவர்; பீன்ஸ்; தக்காளிப்பழம்; பச்சைப் பட்டாணி; சர்க்கரை வள்ளிக்கிழங்கு: லெட்டூஸ் என்ற கீரை; ஓர் இனிப்பு; காப்பி. இரவு உணவு :- இது பகல் உணவைப் போன்றே இருக்கும்.