166 இறைச்சி உண்ணாதவர்கள் UN இறைச்சி உண்ணாதவர்கள் ஒருசிலர் அமெரிக்கரிலும் உளர்; இறைச்சி உண்பவருள்ளும் பலர், குறிப்பாக யூதர், பன்றிக்கறியை உட்கொள்வதில்லை. ஆனால் அமெரிக்காவில் விசைவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எல்லோருமே முட்டை யும், ஒரு சிலர் மீனும் உட்கொள்ளுகின்றனர். பழங்களும், ரொட்டியும், பாலும், தயிரும் விதவிதமான ஊறுகாய்களும் அங்கே தங்கு தடையின்றிக் கிடைப்பதால் சைவர்கள் துன்ப மின்றி வாழ இயலும். அமெரிக்காவில் சைவர்கள் முட்டையை உட்கொள்ளு வது, அது உடல் நலம்தருவதாக இருப்பதாலேயே ஆகும். முட்டையானது வளர்ச்சியடையாத கோழி; அதனால் உடல் வளர்ச்சிக்கு வேண்டிய குணங்கள் முட்டையில் இருக்கின்ற றன. இருப்புபோன்ற தாதுப் பொருள்கள் அதில் உண்டு. முட்டையைப் பச்சையாகவும், வேகவைத்தும், பலவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். மனிதனுக்கு நாள்தோறும் அவசி யமாயுள்ள 2600 காலரிகளில் ருந்து மட்டும் 98 காலரிகள் பெறலாம். ஒரு முட்டையில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய தசைப் பொருளில் (Proteins) 9ச த விகிதம் கிடைக்கிறது. உயிர்ச்சத்து (Vitamin A) 1241 மூல அளவுகள் I.U. (International units) ஒவ்வொரு முட்டையிலும் இருப்பதாகவும் சத்துணவு ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். உண்ணும் முறை ல் (Calories) ஒரு முட்டையிலி வலது கையால் நாம் எடுத்து உண்பதற்கு வசதியாக உணவை நமது இடது பக்கத்திலேயே கொண்டு வந்து அமெரிக்கர் பரிமாறுகிறார்கள். நமது வலது பக்கத்தில் ஏதாவது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டால், அது நமக்கு வலது பக்கத்தில் இருப்பவருக்காக வைக்கப்படு வதே ஆகும்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/167
Appearance