16 களை அமைப்பவர்கள் இந்தத் துறையில் போதிய கவனம் செலுத்தினால், நம் சந்ததியாராவது அழகிய நகரங்களில் வாழ இயலும். நகர நிர்வாகம் நியூயார்க் மிகத் தூய்மையான நகரம். ஏன், எல்லா அமெரிக்க நகரங்களுமே இப்படித்தான். யாவரையும் கவ ரும்படி சாலைகள் பேணப்படுவதற்கு முதற்காரணம், இயந் திரங்களின் உதவியுடன் சாலைகள் துப்புரவு செய்யப்படுவது. நியூயார்க் நகரம் சுத்தமாயிருப்பதற்கு மற்றொரு காரணம் புகை ஏற்படும் எந்தப் பொருளையும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாம். பிறிதொரு காரணம் நகர சபைகளின் பெருஞ் செல்வநிலை. நியூயார்க் நகரில் ஆகாய விமான நிலையமும், 654 மைல் நீளமுள்ள பாதாள ரயில்வே யும், பூஞ்சோலைகளும் மருத்துவசாலைகளும், காவல் நிலையங் களும் நகராண்மைக்கழகங்களைச் சேர்ந்தவையே.நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, நியூ ஆர்லியன்ஸ், பிலடல்பியா ஆகிய துறைமுகங்கள் எல்லாம் அந்தந்த நகராண்மைக் கழகங்களைச் சேர்ந்தவையேயாகும். இவற்றின் மூலம் நகரசபைகளுக்கு மிகுந்த வருமானம் கிடைக்கிறது. இந்த நகரசபைகளால், எளிதில் கடன் வாங்கவும் இயலுகிறது. இவற்றிற்குக் கடன் கொடுக்கவும் பல நிலையங்கள் உள்ளன. நகர சபைகளுக்குக் கொடுக்கும் கடன் தொகைக்கு, வருமான வரியில் சிறிது கழிவு தரப்படுகிறது. இவற்றால் நியூயார்க் நகராண்மைக் கழகத்தார் 3000 மிலியன் டாலர் (2700 கோடி ரூபாய்) கடன் வாங்கியிருக்கின்றனர். பம்பாயும் நியூயார்க்கும் . நம் நாட்டில் செல்வநிலையிலும், மற்றும் பல துறைகளி லும் பம்பாய் முதன்மையாயிருப்பதுபோல, அமெரிக்காவில் நியூயார்க் இருக்கிறது. பம்பாயின் தலால் தெருவிலுள்ள பங்கு, பருத்தி, தங்கம், வெள்ளி மார்க்கட்டுகள் இந்தியா
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/17
Appearance