17 வுக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட் உலகப் பொருளாதாரத்தையே சீராக்கவும் சீர்குலைக்கவும் வல்லது. எனினும் பம்பாய் இந்தியாவின் தலைநகராக இல்லாததுபோலவே, நியூயார்க்கும் அமெரிக்கா வின் தலைநகராகவோ நியூயார்க் இராச்சியத்தின் தலைநகரா கவோ இல்லை. (நியூயார்க் இராச்சியத்துக்குத் தலைநகர் ஆல்பனி என்ற ஒரு சிற்றூரே ஆகும்.) பம்பாயைப்போல நியூயார்க்கும் ஒரு தீவு. இந்தியப் பஞ்சு ஆலைத் தொழில் தலைநகரமாகப் பம்பாயும், அமெரிக்கப் பஞ்சு ஆலைத்தலைநகர மாக நியூயார்க்கும் இருக்கின்றன. இந்தியத் துணியில் -20 சதவீதம் பம்பாய்த் தீவிலும் அமெரிக்கத் துணியில் 75 சதவீதம் நியூயார்க் தீவிலும் உற்பத்தியாகின்றன. பம்பாயில் பார்சிகளும் நியூயார்க்கில் யூதர்களும் மிகச் சிறுபான்மை வினரே. (அமெரிக்கரில் ஐந்தில் நான்குக்குக் மேற்பட்டவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர். அங்கே நிலவும் அடுத்த பெரியமதம் யூத மதம்.) எனினும், இரு நகரங்களிலும் இச் சிறுபான்மையோரே பொருளாதார வலுவுள்ள வகுப் வினராக இருக்கின்றனர். ஐரோப்பியருக்கு இந்தியாவின் தலைவாயில் பம்பாய்; அமெரிக்காவின் தலைவாயில் நியூயார்க். பம்பாய்க்குவருபவர்களை இந்தியாவின் தலைவாயில் (Gateway of India) என்ற மண்டபமும், நியூயார்க்குக்கு வருபவர்களைச் "சுதந்திரச் சிலை' யும் எதிர்கொண்டழைக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைவிடப் பம்பாய் உலக முழுவதும் தெரிந் திருப்பதுபோல ஏனைய அமெரிக்க நகரங்களைவிட நியூயார்க் உலகப்புகழ் பெற்றுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர் அம்பாயைப் பார்க்காதது போலவே கோடிக்கணக்கான அமெரிக்கரும் நியூயார்க்கைப் பார்த்ததில்லை! பம்பாயில் பல ஆயிரம் வெளிநாட்டார் இருக்கின்றார்கள்; நியூயார்க்கில் ல் லட்சம் வெளிநாட்டார்கள் உளர். பம்பாயில் ஏழு, எட்டு மாடிக் கட்டிடங்கள் மிகுதியாக இருப்பதுபோல, நியூயார்க்கில் நாற்பது, ஐம்பது மாடிக் கட்டிடங்கள் பல இருக்கின்றன. நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் உலகத்திலேயே பெரியது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/18
தோற்றம்