உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தீவுகளும் மாவட்டங்களும் நியூயார்க் என்பது மன்ஹாட்டன் தீவை மட்டுமே குறிக்கும். விரிந்த நியூயார்க் (Greater New York என்பது வேறு சில சிறு தீவுகளும், உள் நாட்டிலுள்ள பிரான்க்ஸ், ரிச்மண்டு, குயின்ஸ், புரூக்லின் போன்ற மாவட்டங்களும் சேர்ந்தது. இவை நமது சென்னையிலுள்ள மாம்பலம், அடையாறு, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர் போன்றவை. இந்த மாவட்டங் களைப் பற்றிக் கூறுமுன் மன்ஹாட்டன் தீவின் சில முக்கிய பகுதிகளைப் பற்றிக் கூறுவேன். ராக்பெல்லர் சென்டர் தியேட்டர் டிஸ்ட்ரிக்டில் 50 ஆம் வீதியில் ராக்பெல்லர் சென்டர் என்ற ஓர் இடத்தில் 15 கட்டிடங்கள் ஒரே தொகுதியாக உள்ளன. இங்கே, ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குச் செல்லச் சுரங்கப் பாதைகள் உள்ளன. இக்கட்டிடங்களில் உயரமான 'R. C.A.'என்ற அமெரிக்க வானொலிக் குழுவின் (Radio Corporation of America) கட்டிடம் 70 மாடி கொண்டது. இதன் உச்சியி லிருந்து பார்த்தால் 80 கி.மீ. சுற்றளவு தூரம் தெரியும் இந்தக் கட்டிடங்களுக்குள்ளேயே பல நாட்கள் உண்ணவும், விளையாடவும், படம் பார்க்கவும், இங்கே நடைபெறும் வானொலி (Radio) தொலைக்காட்சி (Television) நிகழ்ச்சிகளை நேரில் கேட்கவும் காணவும், பிற மொழிகள் படிக்கவும் பாதாள் ரயிலில் செல்லவும், உறைந்த பனிக்கட்டியில் விளையாடவும், தோட்டத்தில் உலாவவும் இவைபோன்ற- பல வழிகளிற் பொழுது போக்கவும் இயலும். ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் என்ற உலகிற் பெரிய தியேட்டரும் இங்கேதான் இருக்கிறது. நூல் நிலையம் ஆண்ட்ரூ கார்னேஜி என்ற பெருஞ் செல்வர் அளித்த ஐந்து மிலியன் டாலர் (ஐந்து கோடி ரூபாய்) நன்கொடை