64 19 யால் ஏற்பட்ட 50 நூல் நிலையங்களுள் முதன்மையானது நியூயார்க் பப்ளிக் லைப்ரரி'. இது ஐந்தாவது அவென்யூ. 42-ஆம் வீதியோடு சேருமிடத்தில் உள்ளது. இங்கே 30 லட்சம் நூ ல்கள் உள்ளன. இது உலகிற் பெரிய நூல் நிலையங்களில் ஒன்று. குருடர்களுக்கென நூல் நிலையம் ஒன்றும், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், பல நாட்டுப் படங்கள் ஆகியவை உள்ள (Reference) நூல் நிலையம் ஒன்றும்,குழந்தைகளுக்கான நூல் நிலையம் ஒன்றும் இந்த நிலையத்தின் பகுதிகளாக உள்ளன. நியூயார்க் நகராண்மைக் கழகத்தார் இந்த நிலையத்தையும் இதனைச் சேர்ந்த இருபது சிறு நூல் நிலையங்களையும் நடத்துகின்றனர். இவை இரவு 11 மணி வரை திறந்திருக்கின்றன. மிகச் சிறு நகரங்களிற் கூட அந்தந்த நகரில் வாழும் மக்கள் எண்ணிக்கைக்குச் சம. மான எண்ணிக்கையுள்ள நூல்களையுடைய நிலையங்கள் இருக் கின்றன. இவற்றில் குழந்தைகளுக்கான தனிப்பகுதிகள் காற்றோட்டம் மிகுதியாயுள்ள அகன்ற அறைகளில் இருப்ப தும் குறிப்பிடத் தக்கது. இப்பகுதிகளில், அதிக உயர மில்லாத மேசைகளும் நாற்காலிகளும் ஒன்றேகால் மீட்டர் உயரமேயுள்ள (நூல்கள் வைக்கும்) அலமாரிகளும் இருக்கின் றன. வாரந்தொறும் ஒரு மணி நேரத்திற்கு இங்கே குழந்தை களுக்குக் கதைகள் படிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல நூல் நிலையங்கள் வாரந்தொறும் பொருட்காட்சி விழா நடத்துகின்றன. குறிப்பிட்டதொரு பொருளைப் பற்றிய நூல்களை ஒவ்வொரு வாரமும் இவ்விழாவின் வாயிலாக. விளம்பரப்படுத்துகின்றனர். எம்பயர் ஸ்டேட் 42-ஆம் வீதிக்குத் தெற்கே எட்டு வீதிகளுக்கு அப்பால் 34-ஆம் வீதியில் உலகிலேயே உயரமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் இருக்கிறது. இது வானத்தை முத்தமிடுவது போல் தோன்றும் மாளிகை. வீதியின் மட்டத்திற்குக் கீழ் இரு மாடிகளும், மேலே 102 மாடிகளும் உண்டு. 102-ஆம்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/20
Appearance