உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாடியை எக்ஸ்பிரஸ் லிப்ட் மூலம் ஒரே நிமிஷத்தில் அடைந் தது எனக்குக் கண்கட்டு வித்தையாகவே இருந்தது! லிப்டில் இருந்த ஒரு மணித்துளியில், மகிழ்ச்சியும் அச்சமும் மாறிமாறித் தோன்றி மறைந்தன. உச்சியிலிருந்து பார்த்த போது, சாலைகளில் சென்ற லட்சக்கணக்கான கார்களும் மனிதர்களும் கொசுக்கள் எறும்புகள் போலத் தோன்றக் கண்டேன். இந்தக் கட்டிடத்தில் ஒரு லட்சம் பேர் தங்க லாம்; இங்கே பல்லாயிரம் அலுவலகங்கள் உள்ளன 102-ஆவது மாடியில் வான ஆராய்ச்சி நிலையமும் சிற்றுண்டிச்சாலை ஒன்றும் உள்ளன. 60 மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சிக் கோபுரம் இக்கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட இருக்கிறது. இக்கட்டிடம் நள்ளிரவுக்குப் பின்னருங்கூடத் திறந் திருக்கிறது. ஐந்து ரூபாய் கட்டணம் கொடுத்து டிக்கட் வாங்கினால், யார் வேண்டுமானாலும் போகலாம்; வரலாம்; 102-ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரையும் போக்கிக் கொள்ளலாம். (இவ்விதம் செய்வோரும் உண்டு!) நள்ளிர வில் ஒளிரும் நிறைமதி மிக்க வெளிச்சம் தருகிறதா? நியூயார்க்கில் டைம்ஸ் ஸ்கொயரைச் சுற்றித் திருக்கார்த் திகை வளக்குகளைப் போலுள்ள எண்ணிலா மின்சார விளக்குகள் அதனை விட ஒளிமயமாக இருக்கின்றனவா? என்று அறியவும் எம்பயர் ஸ்டேட்டுக்குச் செல்லலாம். (இந்தியாவில் ஆளொன்றுக்கு 109 கிலோவாட்மணி மின் சாரசக்தியும், அமெரிக்காவில் இதைப்போல 77 மடங்கும் செலவாகின்றன.) "மண்ணெண்ணெய் விளக்கைப் பார்த் தவர்கள் கை தூக்குங்கள் என்று ஒரு வகுப்பில் ஆசிரியர் கூறியபோது பாது, மாணவர் ஒருவர் கூடக் கைதூக்கவில்லையாம். அமெரிக்காவில் மின்சார வளர்ச்சிக்கு வேறு சான்று வேண்டுவதில்லை. சைனா-டவுன் என்று 'சீனர், சைனா தவிர வேறு எங்கும் இருப்பார்கள்! சொல்லுவதுண்டு: இது ஓரளவு உண்மையே.