21 உலகெங்கும் பல நாடுகளிலும் நான் சீனரைப்பார்த்தேன். அமெரிக்காவில் வாழும் பல லட்சம் சீனர் அமெரிக்கக் குடிமக்கள்களாக ஆகிவிட்டனர். பம்பாயில் தமிழ் மக்களுள்ள மாதுங்கா பகுதிபோல, நியூயார்க் நகரில், சைனா டவுன் என்ற ஒரு பகுதி இருக்கிறது. சீனக் கோயில் களும், சைனாவில் செய்யப்பட்ட வேடிக்கைப் பொருள்களை விற்கும் கடைகளும் இங்கே உள்ளன. ஆற்றின்கீழ் அதிசயச்சாலை குயின்ஸ் என்ற மாவட்டத்தில் வாழும் நண்பர் ஒருவர் தம் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். குயின்சுக்கும் மன்ஹாட்டான் தீவுக்குமிடையே ஹட்சன் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கீழ், பல நூறு கோடி டாலர்கள் செலவிட்டு, 2750 மீட்டர் நீளமுள்ள லின்கன் டன்னல் என்ற சுரங்கப் பாதை கட்டப்பட்டுள்ளது. இதனால், ஆற்றைக் காணாமலே அக்கரையை அடைந்தேன். ஒரு திக்கில் செல்ல ஒரு பாலமும், மற்றொரு திக்கில் வரப் பிறிதொரு பாலமும் இருக்கின்றன. ஒவ்வொரு பாலத்திலும் மணிக்கு 50 கி.மீ. வேகத்திற்குக் குறைந்தும், மிகுந்தும் செல்லும் வாகனங் களுக்குத் தனித் தனிப் பாதைகள் ஒதுக்கிவிடப்பட்டுள்ளன. உலகத் தலைநகர் ஐக்கிய நாடுகள் குழுவின் அலுவலகக் கட்டிடங்கள் நியூயார்க் நகரில், ராக்பெல்லர் குடும்பத்தார் அன்பளிப் பாகக் கொடுத்த இரண்டாயிரம் ஏக்கர்ப் பரப்புள்ள இடத்தில் ஹட்சன் ஆற்றங்கரையில் 42-ஆவது வீதி தொடங்குமிடம் முதல், 48-ஆவது வீதி தொடங்குமிடம் வரை ஒரே தொகுதியில் எட்டுக் கட்டிடங்கள் 39 மாடி களுடன் நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கட்டிடச் செலவுக் காக ஐ.நா. அலுவலகத்துக்கு அமெரிக்க அரசினர், வட்டி யின்றி 65 மிலியன் டாலர் கடன் கொடுத்துதவியுள்ளனர். இதன்பயனாக, நியூயார்க் உலகத் தலைநகராகியிருப்பது
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/22
தோற்றம்