உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பற்றிப் பொதுவாக அமெரிக்கரும், சிறப்பாக நியூயார்க் மக்களும் பெருமைப்படுகிறார்கள். குடியிருப்பு வீடுகள் குடியிருப்பு வீடுகளுக்கு அபார்ட்மெண்ட் ஹவுஸ் (Apartment House) என்று பெயர். இவற்றில் 20-க்கு மேல் 30 மாடிகள் வரை உள்ளன. ஒவ்வொரு மாடியிலும் எட்டு அல்லது பத்துக் குடும்பத்தினர் பல ஆண்டுகள் வரை, ஒருவரை ஒருவர் அறியாமல் வாழ்கின்றனர்! இவ் விதமான ஒவ்வொரு கட்டிடத்திலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களும், மருத்துவமனையும், அஞ்சல் நிலையமும் தையற் கடையும், உயர் சலவை நிலையமும், பானங்கள் ஐஸ்கிரீம் முதலியவற்றை விற்கும் கடையும், விளையாடுமிடங்களும் இருக்கின்றன. நியூயார்க்கிலும் கீழ்ப்பாக்கம் புருக்லின் என்பது நியூயார்க்கின் கீழ்ப்பாக்கம். போதிய அளவு உறங்காததாலும், ஓயாமல் வேலை பார்ப்ப தாலும் அமெரிக்காவில் பைத்தியக்காரர்கள் பல நூறாயிரம் பேர் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் இவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. நியூயார்க் மக்களின் குணங்கள் நியூயார்க் மக்களுக்கு வழவழ' என்று பேச நேர மில்லை. பகலில் நேரமின்றி இரவில் 11 மணிக்குமேல் டென்னிஸ் ஆடுபவர்களுக்கு எப்படி நேரம் இருக்க முடியும்? ஆகவே, தம்மிடம் பேச வருபவர்களை முதலில் சந்திக்க ஒரு செயலாளர் வைத்திருக்கும் பெரியோர்கள் பலர் இந் நகரில் உள்ளனர். இவ்வேலை பார்க்கும் பெண்கள் புதிதாய் வருபவர்களிடம் எல்லாச் செய்திகளையும் கேட்டுக்கொண்டு அதன் பின்னர், அவர்கள் சொல்லியவற்றை உரியவருக்குச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றனர். ஆலைத்