உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தொழிலுக்கு அடுத்தபடி வெளிநாட்டாரால்தான் நியூயார்க் நகரத்துக்கு வருவாய் கிடைக்கிறது. வாணிகத்துக்காகவும் பொழுது போக்குக்காகவும் இந்நகருக்கு வருபவர்கள் ஆண்டுதோறும் ஒரு பிலியன் டாலர் (474 கோடிரூபாய்) செலவிடுகின்றனர். நியூயார்க் மக்கள் விரும்புபவை: நகைச்சுவை நிறைந்த குட்டிக் கதைகள், தலைகீழ் வேகம், தம் வேலைகளைத் தாமே செய்தல்,சுருக்கமான எழுத்துக்கள், ஐஸ்கிரீம், அலுவலகங் களில் சிறுசிறு காகிதங்களைக் குப்பையாகச் சேர்த்து வைத்திருந்து பிறநாட்டுப் பேரறிஞர்கள் பிராட்வே வழி யாகச் செல்லும்போது, காகிதமாலைகளை அவர்கள் மீது அன்பின் அறிகுறியாக எறிவது. நியூயார்க் மக்கள் விரும்பாதவை: அன்ன நடை, கிரிக்கட், வீண்வேலை, சம்பிரதாயம், ஆற அமர எதையும் செய்வது பிறரைப் பின்பற்றுவது. நியூயார்க் நகரில் இருப்பவை : ஹோட்டல்கள் - 11,000, குளிர்ந்த பானங்கள் விற்கும் கடைகள் - 40,000. மின் இயக்கி கள்- 63,000. மோட்டார் கார்கள் - 40 லட்சம். நாய்கள்- 30 லட்சம். நியூயார்க் நகரில் இல்லாதவை : அசுத்தம், டிராம், ஓய்வு, போதுமான உறக்கம், சுடுமூஞ்சிகள், பிச்சைக்காரர், அடுத்த வீதியில் உறவினர். நியூயார்க் நகரில் நிகழ்வன : ஏ ழு மணித்துளிகளுக்கு ஒரு பிறப்பு, ஐந்து மணித்துளிகளுக்கு ஒரு திருமணம், 15 மணித் துளிகளுக்கு ஒரு விபத்து, ஒருமாதத்திற்கு 40 தற்கொலைகள் நியூயார்க் மக்களின் குறிக்கோள்: ஆடம்பரமாக வாழ்வது: எந்த வழியிலாவது திடீரென்று பணம் சம்பாதிப்பது, பந்தயம் கட்டுவது, பொருளீட்ட எளிதான வழி. அமெரிக்காவில் ஒரு பிலியன் என்பது ஓராயிரம் மிலியனுக்குச் சமம் ஆகும்.