உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பந்தயம் கட்டுகிற பிரச்சினைகள் அற்பமானவையாக இருக்கும். பல பந்தயங்கள் அங்கே அடிக்கடி நிகழ்கின்றன. "மீன் விற்ற காசு நாறுமா?" அது போலவே, "பந்தயத்தில் கிடைத்த டாலர் செல்லாதா?" என்று கேட்கின்றனர், பந்தயப் பித்துடைய அமெரிக்கர். வாழ பொதுவாக அமெரிக்கர் நல்லவர். தாமும் வேண்டும் பிறரும் வாழவேண்டுமென்பது அவர்களுடைய அவா. மனிதன் தன் வேலைகளுக்கு, இயந்திர உதவியையே அன்றி, வேறொரு மனிதனின் உதவியை நாடக்கூடாது. என்பது அவர்கள் கருத்து. அமெரிக்கர் ஒவ்வொருவரும் தமக்குத் தானே மன்னன், தமக்குத் தானே வேலைக்காரன் தமக்குத்தானே எல்லாம் என்ற மனப்போக்குடையவர். அமெரிக்கரின் கொள்கை அறம் செய்வது நல்லது; ஆனால், அறம் செய்யும் தொகைக்கு அரை வட்டி கிடைத்தால், அதைவிட நல்லது.' 2. நாடும் மக்களும் அரசியல் வீடுதலை அடைந்ததன் பின்னர், அயல்நாடு களைப்பற்றிய அறிவுப்பசி நம்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது: அதற்கு முன்னர், பிரிட்டிஷ் பேரரசுக்குட்பட்ட பகுதிகளைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரிந்திருந்தது. இப்போது, பிரிட்டிஷ் பேரரசுக்கு வெளியேயுள்ள நாடுகளுடனும் நாம் மேன்மேலும் தொடர்பும் உறவும் கொண்டுள்ளோம். இந் நாடுகளுள் முதன்மையானது அமெரிக்கா. தகவல் சாதனங் களும் சுற்றுப்பயணக் கலையும் வளர்ச்சி அடைந்திருப்பதின் விளைவாக இவ்விரு நாடுகளிலும் ஒன்றின் நிகழ்ச்சியைப் பற்றி மற்றொன்றில் முன்னர் இருந்ததைவிட மிகுதியான அக்கறை ஏற்பட்டிருக்கிறது.