அமெரிக்கா: ஒரு பொதுப்பெயர் 4 25 3 பொ துவாக, அமெரிக்கா என்பது வட, தென் அமெரிக்கப் பெருநிலப்பரப்புகளிலுள்ள எல்லா நாடுகளை யுமே குறிப்பிட்டபோதிலும், இன்றைய உலக வழக்கில் 'அமெரிக்கா' என்பது அமெரிக்காவில் ஐக்கியமாயுள்ள 50 இராச்சியங்களையே (United States of America) குறிக் கின்றது. கொலம்பஸ், அமெரிக்காவை கண்ட பிறகு அப் பரந்த நாட்டைப்பற்றி நன்கு அறிய, ஐரோப்பிய நாட்டவர் பலர் முயன்றனர். ஐக்கிய அமெரிக்க நாட்டில் குடியேறி யவருள் ஆங்கிலேயரே முதலிடம் பெற்றனர். யுனைட்டட் ஸ்டேட்சுக்கும் மற்ற அமெரிக்க நாடுகளுக்கும் சிறப்பான வேறுபாடு யாதெனில், இங்கே ஆங்கிலமொழி மட்டுமே பேசப்படுவதாகும். கனடாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் பேசப்படுகின்றன. பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி வழங்குகின்றது: தென் அமெரிக்காவின் மற்ற நாட்டவரெல்லாம் பேசும் மொழி 'ஸ்பானிஷ்' ஆகும். பரப்பும் மக்களும் அமெரிக்கா கிழக்கு மேற்கில் (நியூயார்க்கிலிருந்து சான் பிரான்சிஸ்கோவரை) 5000 கி. மீ.யும் தெற்கு வடக்கில் (மெக்சிகோ எல்லையிலிருந்து கனடா எல்லை வரை) 2600 கி.மீ.யும் அகன்றிருக்கிறது: இந்தியா, கிழக்கு மேற்கில் (கல்கத்தாவிலிருந்து பம்பாய் வரை) 1800 கி. மீ.யும், தெற்கு வடக்கில் (குமரிமுதல் காஷ்மீரம் வரை) 3200 கி. மீ.யும் இருக்கிறது. அமெரிக்காவின் கடற்கரை இந்தியாவின் கடற்கரையைப்போல நான்கு மடங்கு. அமெரிக்கா ஒரு கோடி சதுர கி.மீ. பரப்புள்ள நாடு; அங்கே 22 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவைப் போல மூன்று பங்கு பரப்புள்ள இடத்தில், இந்தியா
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/26
தோற்றம்