26 விலுள்ள மக்களில் பத்தில் மூன்று பங்குக்குச் சமமான மக்கள் வாழ்கின்றனர். மூலப்பொருள்கள் மூலப்பொருள்களின் மிகுதியாலும் பொருளாதார வலுவாலும் இன்றைய உலகில் அமெரிக்கா தலைசிறந்து விளங்குகின்றது. பல விதமான தட்ப வெப்ப நிலைகள் இந்நாட்டின் பல பகுதிகளில் நிலவுவதால் பெரும் அளவு அரிசியும், ஆண்டுதோறும் 5 கோடி டன் கோதுமையும் 10 கோடி டன் சோளமும், 4 கோடி டன் சீமை அவலும் பலவிதமான பழங்களும், பிற உணவுப் பொருள்களும் சர்க்கரையும் மிகுதியாகக் கிடைக்கின்றன. தொழில் வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் அமெரிக்கா இவற்றால் இன்றும் பெரிய விவசாய நாடாகவும் இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சியிலும் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது. அங்கே, நிலக்கரி, பெட்ரோல், மின்சார சக்தி முதலான எரி பொருள்களின் உற்பத்தி அளவு கடந்தது. பருத்தியும் பஞ்சும் உலக உற்பத்தியில் சரிபாதிக்குமேல் அங்கே கிடைக்கின்றன; உரிய காலத்தில் பருத்தியை விரைவாகச் சேகரிப்பதற்காக, மகசூல் காலத்தில் அமெரிக்காவின் சில பகுதிகளில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறையளித்து, மாணவர்களை விவசாயப் பண்ணை களுக்கு அனுப்பிவிடுகின்றனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் 175 கோடி பவுண்டு (இந்தியாவில் 100 கோடி பவுண்டு) புகையிலையும், 12 லட்சம் டன் (இந்தியாவில் மூன்று லட்சம் டன்) ஆளி விதையும் விளைகின்றன. அமெரிக்காவில் 15 கோடி டன் இரும்பும் எஃகும் உற்பத்தி யாவதால், மோட்டார்க் கார் உற்பத்தியிலும், இயந்திரக் கருவிகள் போன்றவை செய்வதிலும் அமெரிக்கா முன்னணி யில் நிற்கிறது. அமெரிக்கர், தம் நாட்டிலில்லாத ரப்பர், மைகா போன்ற மூலப்பொருள்களுக்கு மாற்றாகச் செயற்கை ரப்பர், செயற்கை மைகா (Synthetic Mica) ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/27
தோற்றம்